/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/194_26.jpg)
விதார்த், வாணி போஜன், ரகுமான், கிரித்திக் மோகன் உள்ளிட்ட பலர் பிரதான கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் படம் அஞ்சாமை. இதனைத் திருச்சித்ரம் தயாரிப்பு நிறுவனம் மூலம் டாக்டர் எம்.திருநாவுக்கரசுதயாரித்துள்ளார். இந்தப் படத்தினை அறிமுக இயக்குநர் சுப்புராமன் இயக்கி இருக்கிறார்.
இவர் இயக்குநர் மோகன் ராஜா, இயக்குநர் லிங்குசாமி ஆகியோரிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தவர். இப்படத்தின் ஒளிப்பதிவாளர் கார்த்திக், திரைப்படக் கல்லூரி மாணவரான இவர் பிரபல ஒளிப்பதிவாளர் ராம்ஜியிடம் பல படங்களில் உதவியாளராக பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.இந்தப் படம் நீட் தேர்வின் மூலம் ஏற்பட்ட கல்வி முறை மாற்றங்கள், மாணவர்களிடையே ஏற்பட்ட பாதிப்பு உள்ளிட்டவற்றை வைத்து உருவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படத்தின் அனைத்து உரிமைகளையும் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. ஜூன் மாதம் படம் வெளியாகிறது. படத்திற்கு யு சான்றிதழ் வழங்கியுள்ளது தணிக்கை குழு வாரியம். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் நாளை (28.05.2024) மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)