vidharth speech in irugapatru thanks giving meet

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்த நிலையில், படக்குழு சார்பில் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விதார்த் பேசுகையில், "ஒவ்வொரு படத்துக்கும் அதன் தயாரிப்பாளர் நம்ம படம் வெற்றியடைந்துவிட்டது என சொல்வார்கள் என எதிர்பார்ப்பேன். அது நடக்கவில்லை. நல்ல படமாக இருக்குமே தவிர வெகுஜன மக்களிடம் போய் சேர்ந்திருக்காது. ஆனால் இந்த பட தயாரிப்பாளர் படம் வெற்றி என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல ஒரு ஆவல் 13 ஆண்டுகளாக இருந்தது. அது தற்போது நிறைவேறியிருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.

Advertisment