Skip to main content

விதார்த் - லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி இணையும் புதிய படம் பூஜையுடன் ஆரம்பம்!

Published on 20/07/2021 | Edited on 20/07/2021

 

vfgehshds

 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜய ராகவேந்திரா ‘கொரில்லா’, ‘மசாலா படம்’, அருண் விஜய் நடித்து விரைவில் வெளியாகவுள்ள ‘பார்டர்’ உள்ளிட்ட படங்களைத் தயாரித்துள்ளார். அந்த வரிசையில் இவர் தற்போது விதார்த், கருணாகரன், லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி ஆகியோர் நடிப்பில் தனது  அடுத்த தயாரிப்பாக  'புரொடக்ஷன் 6' படத்தைத் தயாரிக்கிறார். இதில் நடிகர் சரித்திரன், பிரேம், சௌமியா, கவிதாலயா கிருஷ்ணன், மூணார் ரமேஷ் மற்றும் பலர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கான தலைப்பு இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதனை ‘உறுமீன்’ படப்புகழ் இயக்குநர் சக்திவேல் பெரியசாமி எழுதி இயக்கவுள்ளார். இந்தப் படத்திற்கான படப்பிடிப்பு தற்போது எளிமையான பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் இப்படம் குறித்து இயக்குநர் சக்திவேல் பெரியசாமி பேசியபோது...

 

"ஒரு உண்மை சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு, நம் சிந்தனையைத் தூண்டும் வகையில் உருவாகும் படைப்பு இது. தற்காலத்தின் பிரச்சனைகளைச் சுற்றி நடக்கும் கதையென்பதால் ரசிகர்கள் எளிதாக உணரும் வகையில் தங்களுடன் தொடர்புபடுத்திக்கொள்ளும்படி இப்படம் இருக்கும். இந்தப் படத்தின் திரைக்கதையை எழுதி முடித்தபோது, மக்களைக் கவரும் பிரபல நடிகர் இக்கதைக்குத் தேவைப்பட்டார். கமர்சியல் சினிமாவையும் கருத்து மிகுந்த படங்களையும் இணைக்க ஒரு பாலமாக இருக்கும் நடிகரும் தேவைப்பட்டது. அந்த வகையில் பார்க்கும்போது, முதலில் மனதுக்கு வந்தவர் நடிகர் விதார்த் மட்டும்தான். எனக்கு நிச்சயமாக தெரியும் இந்தப் படம் அவருக்கு மிகப்பெரிய இடத்தைப் பெற்றுத் தரும். லக்ஷ்மி பிரியா சந்திரமௌலி நடிப்பை பற்றி நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. தான் ஏற்கும் பாத்திரங்களில், எந்த ஒரு பெரிய மெனக்கெடலும் இல்லாமல் வலிமையான காட்சிகளில் கூட மிகவும் சுலபமாக நடிக்கக் கூடிய நடிகை. 

 

இந்தப் படம் அவருடைய திரை வாழ்க்கையில்  சிறந்த படமாக அமையும். கருணாகரன் நகைச்சுவை கதாபாத்திரம் மட்டுமல்லாமல் குணச்சித்திர நடிப்பை உள்வாங்கி சிறப்பாக நடிக்கும் ஒரு நடிகர். அவரது நடிப்புத் திறனை வெவ்வேறு கதாபாத்திரங்களில் நடித்து நிரூபித்துள்ளார். இந்தப் படத்தில் அவரது கதாபாத்திரம் திரைக்கதைக்குப் பெரிய அளவில் வலு சேர்க்கும் வண்ணம் மிக ஆழமாக அமைந்துள்ளது. ‘டெடி’, ‘90 எம்.எல்’ படங்களில் நடித்துள்ள நடிகை மசூம் ஷங்கர், இந்தப் படத்தில் ஒரு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். நடிகர் சரித்திரன் தமிழகத்தின் பெரும்பான்மை வீடுகளில் நகைச்சுவை நட்சத்திரமாக கொண்டாடப்படுபவர், ரேடியோ, தொலைகாட்சி, இணையதளம் வழியாக மக்களை மகிழ்வித்து வருபவர். அவர் இந்தப் படத்தில் நடிப்பது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது

 

ஆல் இன் பிக்சர்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் டி. விஜய ராகவேந்திரா கூறும்போது... "எங்களது தயாரிப்பில், அருண் விஜய் நடிப்பில் உருவாகிவரும் ‘பார்டர்’ திரைப்படம், விரைவில் உலகளவில் தியேட்டர் வெளியீட்டிற்கு தயாராகிவருகிறது. இந்தக் காலகட்டதில், இந்தப் படத்தின் கதையைக் கேட்டபோது, எனக்கும் மிகப்பெரிய உற்சாகத்தைத் தந்தது. உடனடியாக இப்படத்தைத் தயாரிப்பதென்று முடிவெடுத்துவிட்டேன். அது மட்டுமல்லாது எனது நண்பர் சக்திவேல் அவருக்காகவும் இதை தயாரிக்க வேண்டும் என உறுதியாய் இருந்தேன். இந்தப் படத்திற்காக சிறந்த குழு அமைந்தது மிகுந்த மகிழ்ச்சி. இந்தப் படம் அமைவதற்கு காரணமாகவும், எந்தவித தடையுமில்லாமல் இந்தப் படம் ஆரம்பிப்பதற்கு உதவியாகவும் இருந்த செந்தில் அவர்களுக்கு, இந்த நேரத்தில் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். ஆல் இன் பிக்சர்ஸ்க்கு இது ஒரு பிரத்யேகமான படம். படப்பிடிப்பு தற்போது துவங்கியுள்ளது. குறுகிய காலத்திற்குள் படப்பிடிப்பு முடிந்துவிடும். படத்தை 2022ஆம் ஆண்டின் துவக்கத்தில் தியேட்டரில் வெளியிட திட்டமிட்டுள்ளோம்” என்றார்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

“ஒரு கிடாயின் கருணை மனு போல் வாழ்வியல் சார்ந்த கதை” - விதார்த்

Published on 23/11/2023 | Edited on 23/11/2023

 

vidhaarth about kuiko movie

 

விதார்த் மற்றும் யோகி பாபு முதன்மை கதாபத்திரங்களில் நடித்துள்ள படம் ‘குய்கோ. இவர்களுடன் இளவரசு, முத்துகுமார், ஶ்ரீபிரியங்கா, துர்கா, வினோதினி வைத்தியநாதன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘ஆண்டவன் கட்டளை’ படத்தின் கதாசிரியர் அருள் செழியன், இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். எ.எஸ்.டி பிலிம்ஸ் எல்.எல்.பி வழங்கும் இப்படத்திற்கு பிரபல பின்னணி பாடகர் அந்தோணி தாசன் இசை அமைத்து இருக்கிறார்.  இப்படம் வருகிற 24 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில்,  பத்திரிகையாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 

vidhaarth about kuiko movie

 

அப்போது விதார்த் பேசியதாவது, "இன்றைய நிகழ்வின் நாயகனான இசையமைப்பாளர் அந்தோணி தாசன் அவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏனெனில், இந்தப் படத்தின் ப்ரொடக்‌ஷன் தொடங்குவதற்கு முன்பே, இயக்குநர் அருள் செழியன் சொல்லி, அந்தோணி தாசன் படத்துக்கு மியூசிக் போட்டு, அந்தப் பாடலை நான் கேட்டு அவருக்குப் பேசினேன். இந்தப் படத்தில் இசை மிகப் பிரமாதமாக வந்திருக்கு. படத்தில், இந்தப் பாடல்களுக்கு, நான் ஆடணும்னு நினைச்சேன். ஆனா படத்துல எனக்கு அந்த வாய்ப்பு அமையல. இயக்குநர் அருள் செழியனை, எனக்கு காக்கா முட்டை மணிகண்டன் தான் அறிமுகப்படுத்தினாரு. அப்போ அவர், 'என்கிட்ட ஒரு நல்ல கதை இருக்கு. படிக்கிறீங்களா?' என 'ஃப்ரீஸர் பாக்ஸ்' கதையைக் கொடுத்தார். அந்தக் கதை எனக்கு முன்பே தெரியும். மைனா படத்திற்குப் பிறகு, எனக்குத் தோல்விப் படங்களாக அமைந்தபோது, என் குடும்ப உறுப்பினர்கள் எனக்காக ஒரு படம் தயாரிக்க முடிவு பண்ணாங்க. அப்போ இயக்குநர் மணிகண்டன் எனக்குச் சொன்ன கதைதான் இது. 

 

நான் இந்தக் கதையைத் தயாரிக்கலாம்னு இருந்தேன். அப்போ, 'நீங்க வில்லேஜ் சப்ஜெக்டில் நடிச்சுட்டீங்க. எனக்கும் காக்கா முட்டை முடிஞ்சது. நாம வேற ஜானர்ல பண்ணலாம் என குற்றமே தண்டனை படம் பண்ணோம். மீண்டும், இந்தப் படம் திரும்பி என்னையே தேடி வந்தது. என் கேரக்டரில் ரமேஷ் திலக் நடிப்பதாக இருந்தது. தயாரிப்பு நிறுவனம், ஒரு ஹீரோவாகப் போகலாம் என முடிவெடுத்ததால், நான் நடிக்கிறேன் என ஒத்துக்கிட்டேன். ஆனா, நான் உள்ள வர்றதுக்கு நிஜமான காரணம் கதைதான். அவ்வளவு அழகான கதை. எப்படி 'ஒரு கிடாயின் கருணை மனு' படம் மக்களால் அங்கீகரிக்கப்பட்டதோ, அப்படியான ஒரு வாழ்வியல் சார்ந்த கதை. இந்தப் படத்தின் திரைக்கதையை மிகச் சுவாரசியமான ஒன்றாக உருவாக்கியிருக்கிறார் இயக்குநர் அருள் செழியன். அற்புதமான இந்த இயக்குநர் வெற்றி பெறணும். மக்களுக்கு இந்தப் படம் போய்ச் சேரணும்" என்றார்.

 


 

Next Story

"13 வருட ஆவல் நிறைவேறியிருக்கிறது" - விதார்த் நெகிழ்ச்சி

Published on 12/10/2023 | Edited on 12/10/2023

 

vidharth speech in irugapatru thanks giving meet

 

பொட்டன்ஷியல் ஸ்டுடியோ தயாரிப்பில் யுவராஜ் தயாளன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, விதார்த்,  ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், சானியா ஐயப்பன், அபர்ணதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘இறுகப்பற்று’. ஜஸ்டின் பிரபாகரன் இசையமைத்துள்ள இப்படம் கடந்த 6 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்று வருகிறது. 

 

இந்த நிலையில், படக்குழு சார்பில் வெற்றி விழா நடைபெற்றது. அதில் படக்குழுவினர் பலரும் கலந்துகொண்டு பேசினர். அப்போது விதார்த் பேசுகையில், "ஒவ்வொரு படத்துக்கும் அதன் தயாரிப்பாளர் நம்ம படம் வெற்றியடைந்துவிட்டது என சொல்வார்கள் என எதிர்பார்ப்பேன். அது நடக்கவில்லை. நல்ல படமாக இருக்குமே தவிர வெகுஜன மக்களிடம் போய் சேர்ந்திருக்காது. ஆனால் இந்த பட தயாரிப்பாளர் படம் வெற்றி என்று சொல்லும் போது ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுபோல ஒரு ஆவல் 13 ஆண்டுகளாக இருந்தது. அது தற்போது நிறைவேறியிருக்கிறது" என நெகிழ்ச்சியுடன் பேசினார்.