/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/16_39.jpg)
தமிழ் சினிமாவில் 'மைனா', 'ஒரு கிடாயின் கருணை மனு', 'விழித்திரு' உள்ளிட்ட நல்ல படங்களை கொடுத்து பிரபலமான விதார்த் கடைசியாக 'பயணிகள் கவனிக்கவும்' படத்தில் நடித்திருந்தார். சில மாதங்களுக்கு முன்பு வெளியான இப்படம் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது.
இந்நிலையில் விதார்த் நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன்படி கிரினேட்டிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஆர்.மோகன் ராகேஷ் பாபு இப்படத்தை தயாரிக்கிறார். அறிமுக இயக்குநர் மணிமாறன் நடராஜன் இயக்கும் இப்படத்தில் கதாநாயகியாக ரோஷினி பிரகாஷ் நடிக்கிறார். புலனாய்வு விசாரணையை பின்னணியாக கொண்டு கிரைம் திரில்லர் ஜானரில் இப்படம் உருவாகவுள்ளது. மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ள இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)