ADVERTISEMENT

சைக்கோ த்ரில்லர் படத்தில் விதார்த்

06:52 PM Jul 01, 2022 | ArunPrakash

ADVERTISEMENT

ADVERTISEMENT

அறிமுக இயக்குநர் மணிமாறன் இயக்கத்தில் நடிகர் விதார்த் புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளார். இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை கிரினேடிவ் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் தயாரிப்பாளர் ஆர். மோகன் ராகேஷ் பாபு தயாரிக்கிறார். இப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம் ஸ்ரீனிவாசன் சுந்தர் எழுத ஜிப்ரான் இசையமைக்கிறார்.

காவல்துறையினரின் புலனாய்வு விசாரணை பாணியிலான சைக்கோ த்ரில்லர் அமைப்பில் உருவாக்கவுள்ள இப்படத்தின் பணிகள் இன்று சென்னையில் பூஜையுடன் தொடங்கப்பட்டது. இதில் சிறப்பு விருந்தினர்களாக பட குழுவினருடன் நந்தகுமார் ஐ ஏ எஸ், இயக்குநர்கள் கார்த்திக் சுந்தர், சற்குணம், ராம்நாத் பழனிக்குமார் ‘டோரா’ தாஸ் ராமசாமி, ‘நெருப்பு டா’ அசோக்குமார், ‘மஞ்சப்பை’ என். ராகவன் உள்ளிட்ட பிரபலங்கள் கலந்து கொண்டு படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்தனர். இப்படத்திற்கான கதாநாயகி, நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு நடந்து வருவதால் விரைவில் புதிய அறிவிப்புகள் வெளியாகும் எனப் படக்குழு தெரிவித்துள்ளது.

Show comments
ADVERTISEMENT
ADVERTISEMENT