vidamuyarchi team gets medical test

அஜித் குமார், துணிவு படத்தைத்தொடர்ந்து மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். இருப்பினும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. இப்படத்தின் படப்பிடிப்பு கடந்த மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. இதில் அஜித் த்ரிஷாவோடு நடிகை ரெஜினா கெஸாண்ட்ராவும் நடிப்பதாகத்தகவல் வெளியானது. மேலும் அர்ஜுன், ப்ரியா பவானி ஷங்கர், ஆரவ் உள்ளிட்டோர் இப்படத்தில் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் கூறப்படுகிறது.

Advertisment

இதனிடையே அங்கு நடந்த படப்பிடிப்பின் போது படத்தின் கலை இயக்குநர் மிலன் மாரடைப்பால் காலமானார். இது பலருக்கும் அதிர்ச்சியளித்தது. முதற்கட்ட படப்பிடிப்பு அஜர்பைஜானில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், படக்குழுவினர் அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும்படி அஜித் அறிவுறுத்தியுள்ளார். மாரடைப்பால் மிலன் காலமானதை தொடர்ந்து படக்குழுவினருக்கு ஏதேனும் உடல்நல பாதிப்பு இருக்கிறதா மற்றும் அனைவரின் உடலும் ஆரோக்கியமாக இருக்கிறதா என்பதை உறுதி செய்ய அஜித் இந்த பரிசோதனையை மேற்கொள்ள அறிவுறுத்தியுள்ளார். அதன்படி அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.

Advertisment