Advertisment

ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்த விடாமுயற்சி படக்குழு!

vidamuyarchi Movie Release Postponement

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார். இந்த படம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது எனத் தகவல் வெளியாகியிருந்தது.

Advertisment

அதே சமயம் இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்தனர். இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் நிலையில் படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சவதீகா...(Sawadeeka)’ லிரிக் வீடியோ வெளியாகியிருந்தது.

Advertisment

இந்நிலையில் விடாமுயற்சி திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து தள்ளிப்போவதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ளா அறிவிப்பில், “அனைவருக்கும் இனிய ஆங்கில புத்தாண்டு நல்வாழ்த்துக்கள். சில தவிர்க்க முடியாத காரணங்களால் 'விடாமுயற்சி' திரைப்படம் பொங்கல் வெளியீட்டில் இருந்து பிற்போடப்பட்டுள்ளது. மேலும் இந்த புத்தாண்டு அனைவருக்கும் சிறப்பாக அமைய வாழ்த்துகிறோம்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ACTOR AJITHKUMAR lyca postponed vidamuyarchi
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe