/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/163_28.jpg)
அஜித் குமார், அடுத்ததாக மகிழ் திருமேனி இயக்கத்தில் 'விடாமுயற்சி' படத்தில்நடிக்கவுள்ளார். இப்படத்தை லைகா தயாரிக்க அனிருத் இசையமைக்கவுள்ளார். படத்தின் ஆரம்பக்கட்ட பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விரைவில் படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகக் கூறப்படுகிறது.
முன்னதாக புனேவில் முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கவுள்ளதாகத்தகவல் வெளியான நிலையில், தற்போது ஹைதராபாத்தில் வருகிற ஆகஸ்ட் இறுதியில் ஆரம்பிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. மேலும் த்ரிஷா கதாநாயகியாக கமிட்டாகியுள்ளதாகச் சொல்லப்பட்டது.
இந்நிலையில், இப்படத்திலிருந்துத்ரிஷா விலகியிருப்பதாகவும் அதற்கு பதில் தமன்னா நடிக்கவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக தமன்னாவிடம் படக்குழு பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது. சமீபத்தில் தமன்னா நடித்த 'ஜெயிலர்' படத்தின் 'காவாலா...' பாடல் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளதால் மற்றும் ரஜினி படத்தில் நடித்துள்ளதால் படம் வெளியான பிறகு மீண்டும் தமிழில் ஜொலிப்பார் எனக் கணக்கிட்டு அவரை அணுகி வருகிறதாம் படக்குழு.
இதற்கு முன்னதாக அஜித் மற்றும் தமன்னா வீரம் படத்தில் ஜோடியாக நடித்த நிலையில் அப்படம் நல்ல வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது. மேலும் 'வி' செண்டிமெண்ட், வீரம் படம் மூலம் ஆரம்பித்ததால் அதில் நடித்த தமன்னாவை அதே செண்டிமெண்ட்டில் உருவாகும் விடாமுயற்சியில் நடித்தால் அந்த வெற்றி கைகொடுக்கும் எனக் கணக்குப் போடுகிறதாம் படக்குழு.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)