vidaamuyarchi update

அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், இந்தப் படத்தின் படப்பிடிப்பு பல்வேறு மாநிலங்களில் நடைபெற்றது.

Advertisment

இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. இதையடுத்து அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா உள்ளிட்ட நடிகர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது.

Advertisment

இதையடுத்து படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் தொடங்கியுள்ளதாக தற்போது அப்டேட் வெளியாகியுள்ளது. பூஜையுடன் தொடங்கிய இதில் மகிழ் திருமேணி, ஆரவ் உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். இது தொடர்பான புகைப்படங்களையும் படக்குழுவினர் சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்துள்ளனர். இதனிடையே அஜித் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment