vidaamuyarchi third single thaniye released

மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள படம் விடாமுயற்சி. இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி, கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள நிலையில் அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இப்படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இரண்டு பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

இப்படம் பொங்கல் வெளியீடாக அறிவிக்கப்பட்டு பின்பு விலகி தற்போது நாளை(06.02.2025) வெளியாகவுள்ளது. இதனால் படத்தின் புரொமோஷன் நிகழ்ச்சிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அஜித் படம் வெளியாகி இரண்டு ஆண்டுகளுக்கு மேல் கடந்துள்ளதால் இப்படத்தை பார்க்க அவரது ரசிகர்கள் ஆர்வத்துடன் காத்துக்கொண்டிருக்கின்றனர். படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. முன்பதிவு தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இப்படம் நாளை காலை 9 மணி சிறப்புக் காட்சியுடன் வெளியாகவுள்ள நிலையில் படத்தின் மூன்றாவது பாடலான ‘தனியே’ பாடல் தற்போது வெளியாகியுள்ளது. இப்பாடல் த்ரிஷாவை பிரிந்து தவிக்கும் அஜித் இருக்கும் நிலையில் த்ரிஷாவை நினைத்து அஜித் பாடுவது போல் அமைந்துள்ளது. சோகப் பாடலாக அமைந்துள்ள இப்பாடலை அனிருத் பாடியுள்ளார். மோகன் ராஜன் எழுதியுள்ளார்.