/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/307_19.jpg)
அஜித் நடிப்பில் கடைசியாக 2023ஆம் ஆண்டு துணிவு படம் வெளியான நிலையில் இரண்டு வருட இடைவெளிக்குப் பிறகு இன்று வெளியாகியுள்ளது விடாமுயற்சி படம். இப்படத்தை லைகா தயாரிக்க மகிழ் திருமேனி இயக்கியிருக்க அனிருத் இசையமைத்துள்ளார். இதில் அஜித்துக்கு ஜோடியாக த்ரிஷா வில்லனாக அர்ஜூன் மற்றும் ஆரவ், இவர்களோடு ரெஜினாவும் நடித்துள்ளார்.
நீண்ட இடைவெளிக்குப் பிறகு அஜித் படம் வெளியாகியுள்ளதால்அவரது ரசிகர்கள் வழக்கம் போல் திரையரங்கின் வளாகத்திற்கு முன் பேனர்கள், மேளதாளம், பட்டாசு என கொண்டாடி வருகின்றனர். மேலும் பேனர்களுக்கு பால் அபிஷேகம் செய்தும் ரசிகர்களுக்கு இனிப்புகள் வழங்கியும் மகிழ்ந்துள்ளனர். நெல்லையில் உள்ள ஒரு திரையரங்கில் அஜித் உடலமைப்புடன்(பேனர்) ரசிகர்கள் முகம் வைத்து புகைப்படம் எடுக்கக்கூடிய வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதில் ரசிகர்கள் ஆர்வத்துடன் புகைப்படம் எடுத்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/306_20.jpg)
இதனிடையே காலை 9 மணிக்கு சிறப்பு காட்சியுடன் முதல் காட்சி தொடங்கியுள்ளது. இதனை ரசிகர்கள் கண்டு களிக்கும் நிலையில் அவர்களுடன் திரைப்பிரபலங்களும் திரையரங்கிற்கு சென்று விடாமுயற்சி படத்தை பார்க்கின்றனர். சென்னையில் உள்ள பல்வேறு திரையரங்குகளில் த்ரிஷா, அனிருத், அஜித்தின் அடுத்த பட இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன், ஆரவ், அர்ஜூன் தாஸ் உள்ளிட்டோர் பார்த்து மகிழ்கின்றனர். அவர்கள் திரையரங்கிற்கு வந்ததும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்தனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)