/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/402_58.jpg)
மகிழ் திருமேனி இயக்கத்தில் லைகா தயாரிப்பில் அஜித் குமார், த்ரிஷா நடித்துள்ள படம் விடாமுயற்சி. இந்த படத்தில் இவர்களுடன் ரெஜினா, அர்ஜுன், ஆரவ், நிகில் நாயர், தசரதி மற்றும் கணேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.
இந்த படம் அடுத்த மாதம் வரும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்திற்கான டீசர் கடந்த மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த படத்தின் ஓடிடி உரிமையை நெட்பிலிக்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு தள புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளத்தில் வைரலானது. அடுத்ததாக மொத்த படப்பிடிப்பும் முடிந்ததாக கூறி அஜித்திற்கு மகிழ் திருமேனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்திருந்தார். இதையடுத்து அஜித் தனது டப்பிங் பணிகளையும் முடித்துவிட்டதாக படக்குழு அறிவித்தனர்.
இப்படத்தின் அப்டேட்டுகள் தொடர்ந்து வெளிவந்திருக்கும் நிலையில் தற்போது படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘சவதீகா...(Sawadeeka)’ லிரிக் வீடியோ வெளியாகியுள்ளது. இப்பாடலை ஆந்தனி தாசன் மற்றும் அனிருத் பாடியுள்ளனர். அறிவு எழுதியிருக்க கல்யாண் மாஸ்டர் நடனம் அமைத்துள்ளார். ஜாலியான பாடலாக வெளியாகியுள்ள இப்பாடலில் தற்போது சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக இருக்கும் ‘இருங்க பாய்’ என்ற வார்த்தையை இணைத்துள்ளார். ஏற்கனவே டீசரில் மற்றொரு ட்ரெண்டிங் விஷயமான ‘கடவுளே அஜித்தே...’ என்ற கோஷத்தை போல் பின்னணி இசையமைத்திருந்தார். இது அஜித் ரசிகர்களை மகிழ்வித்தது போல் அதைத் தொடர்ந்து தற்போது பயன்பட்டிருக்கும் ‘இருங்க பாய்’ வார்த்தையும் அஜித் ரசிகர்களின் கவனத்தை பெற்றுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)