/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/66_76.jpg)
அஜித் குமார் தற்போது மகிழ் திருமேனி இயக்கத்தில் ‘விடாமுயற்சி’ படத்தில் நடித்து வருகிறார். லைகா தயாரிப்பில் உருவாகும் இப்படத்தில் த்ரிஷா கதாநாயகியாக நடித்து வருகிறார். மேலும் அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்டோர் நடித்து வருகின்றனர். இப்படம் திரையரங்குகளுக்கு பின் ஓடிடியில் வெளியாகும் டிஜிட்டல் உரிமையை நெட்ஃபிளிக்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளது. இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு கடந்த ஆண்டு அக்டோபர் மாத தொடக்கத்தில் அஜர்பைஜானில் தொடங்கியது. அதன் பின்னர், பல்வேறு இடங்களில் நடைபெற்றது.
இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளிட்ட மூன்று போஸ்டர்கள் சில மாதங்களுக்கு முன்பு அடுத்தடுத்து சில நாட்கள் இடைவெளியில் வெளியானது. இதையடுத்து அஜர்பைஜானில் நடந்து வந்த படப்பிடிப்பு முடிந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து படத்தில் நடித்த அர்ஜுன், ரெஜினா கெஸாண்ட்ரா, ஆரவ் உள்ளிட்ட நடிகர்களின் போஸ்டர்கள் வெளியிடப்பட்டது. இதையடுத்து படத்தின் அப்டேட் எதுவும் வெளியாகாமல் இருந்த நிலையில் படத்தின் டப்பிங் பணிகள் பூஜையுடன் தொடங்கியதாக சமீபத்தில் அறிவிக்கப்பட்டது.
பின்பு எந்த முன்னறிவிப்பும் இன்றி படத்தின் டீசர் கடந்த மாத இறுதியில் வெளியாகியிருந்தது. வசனம் எதுவும் இல்லாமல் வெளியான இந்த டீசர் ரசிகர்களின் வரவேற்பை பெற்றது. இந்தப் படம் அடுத்த மாதம் வரவுள்ள பொங்கலை முன்னிட்டு வெளியாகவுள்ளதாக டீசரில் குறிப்பிடப்பட்டிருந்தது. இதையடுத்து டப்பிங் பணிகளில் அஜித் ஈடுபட்டு கொண்டிருக்கும் புகைப்படம் சமூக வலைதளத்தில் வெளியாகி வைரலானது. இந்த நிலையில் படப்பிடிப்பு தளத்தில் இருந்து அஜித், த்ரிஷா உள்ளிட்ட படக்குழுவினர் இருக்கும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இதனை தயாரிப்பு நிறுவனமான லைகா தங்களது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டு படப்பிடிப்பு இறுதிகட்டத்தில் இருப்பதாக தெரிவித்துள்ளனர். இந்த புகைப்படத்தில் அஜித் உடல் எடை குறைந்து கோர்ட் சூட்டில் ஸ்டைலிஷாக தோன்றுகிறார். த்ரிஷாவும் வித்தியாசமான கெட்டப்பில் இருக்கிறார். இந்த புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/65_60.jpg)
சமீபத்தில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித் நடித்து வரும் ‘குட்-பேட்-அக்லி’ படத்தின் புகைப்படம் வெளியாகியிருந்தது. அதில் அஜித் இளமை தோற்றத்தில் இடம்பெற்றிருந்தது அஜித் ரசிகர்களை கவர்ந்து வரவேற்பை பெற்றிருந்தது. இந்தப் படம் ஏற்கனவே பொங்கலுக்கு அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது விடாமுயற்சியும் அதே சமயத்தில் வெளியாகவுள்ளதால் இப்படம் தள்ளிப் போகவுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் ரிலீஸ் குறித்த அப்டேட் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Follow Us