லாக்டவுனை மீறி வெளியேறியதனால் கைதானாரா பிரபல நடிகர்? 

உலகம் முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 28 லட்சத்தை நெருங்குகிறது. இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் இரண்டு லட்சத்தை நெருங்குகிறது.

vicky kaushal

தற்போது இந்தியாவிலும் கரோனாவின் தாக்கம் அதிகரித்துக்கொண்டே வருகிறது. இதனால் குறிப்பிட்ட மாவட்டங்களில் நாளை முதல் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. ஏற்கனவே சில கட்டுப்பாடுகளுடன் வருகிற மே 3- ஆம் தேதி வரை இந்தியா முழுவதும் ஊரடங்கு உத்தரவை அமல்ப்படுத்தினார் பிரதமர் மோடி என்பது குறிப்பிடத்தக்கது.

இதனிடையே பிரபல பாலிவுட் நடிகர் விக்கி கௌசல், லாக்டவுனை மீறி வீட்டைவிட்டு வெளியேறி போலீஸிடம் மாட்டிக்கொண்டு, கைது செய்யப்பட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் வதந்தி பரவியது.

இதற்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில் விக்கி கௌசல் தனது ட்விட்டரில், “நான் லாக்டவுன் கட்டுப்பாடுகளை மீறியதாகவும் அதனால் போலீஸில் பிடிப்பட்டதாகவும் பரவுவது அடிப்படையற்ற வதந்தியாகும். லாக்டவுன் தொடங்கியதிலிருந்து என் வீட்டைவிட்டு நான் வெளியேறவில்லை. யாரும் இந்த வதந்திகளை நம்ப வேண்டாம் எனக் கேட்டுக்கொள்கிறேன்” என்று பதிவிட்டுள்ளார்.

corona virus
இதையும் படியுங்கள்
Subscribe