Skip to main content

பிரபல நடிகர் விச்சு விஸ்வநாத் மகளுக்கு விரைவில் திருமணம்

Published on 16/10/2023 | Edited on 16/10/2023

 

vichu vishwanath daughter marriage

 

தமிழ்த் திரைப்படங்களில் 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துப் புகழ்பெற்றவர் நடிகர் விச்சு விஸ்வநாத். இவரது மகள் கோகிலாவின் திருமணம் வரும் நவம்பர் மாதம் நடைபெறவுள்ளது. பல திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலர் இத்திருமணத்தில் பங்கேற்கவுள்ளனர். 

 

தமிழ்த் திரையுலகில் இயக்குநர் மணிவண்ணன் இயக்கத்தில் 1990ல் வெளியான ‘சந்தனக்காற்று’  படம் மூலம் வில்லனாக அறிமுகமானவர் விச்சு விஸ்வநாத். வில்லனாக மட்டுமல்லாமல், குணச்சித்திரம், காமெடி எனப் பல படங்களில் நடித்துள்ளார். இதுவரை 130க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். இயக்குநர் சுந்தர்.சி உடைய நெருங்கிய நண்பரான இவர், அவருடன்  38 படங்களில் இணைந்து பணியாற்றியுள்ளார்.  அரண்மனை, கலகலப்பு போன்ற படங்களில் இவரது பாத்திரம் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றது. 

 

இவரது மகள் கோகிலா விஸ்வநாத் ஐடி துறையில் பணியாற்றி வருகிறார். இவருக்கும் ஜெர்மனியில் பணியாற்றி வரும் ஶ்ரீகாந்த் என்பவருக்கும் பெற்றோர்களால் திருமணம் நிச்சயிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமணம் வரும் 23 நவம்பர் அன்று சென்னையில் பிரபலமான திருமண மண்டபத்தில், இருவீட்டார் ஆசியுடன் கோலாகலமாக நடைபெறவுள்ளது. திருமண ஏற்பாடுகளை இரு வீட்டு பெற்றோர்களும் மும்முரமாகச் செய்து வருகின்றனர். இத்திருமணத்தில் பல திரைப் பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் பங்கேற்று வாழ்த்தவுள்ளனர்.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த தந்தை; நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
Father sentenced to life imprisonment for misbehaving with daughter

திருச்சி மாவட்டம் துறையூர் வட்டம் பகுதியைச் சேர்ந்தவர் 64 வயதான விவசாயி. இவருக்கு 35 வயதில் மாற்றுத்திறனாளி (மன நலம் பாதிக்கப்பட்ட ) ஒரு மகள் இருந்தார். கை, கால்களும் செயல் இழந்த அந்த பெண் தனது தாயாரின் பராமரிப்பில் இருந்து வந்த நிலையில் அவரது தாயார் இறந்து விட்டார்.

இதனையடுத்து தனது தந்தை மற்றும் பாட்டியின் பராமரிப்பில் இருந்து வந்தார். இந்நிலையில் கடந்த 2021 ஆவது ஆண்டில் பெண்ணின் உடல் நிலையில் மாற்றம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இதில் மாற்றுத்திறனாளியான அந்த பெண் கர்ப்பமாக இருந்தது தெரியவந்தது. இது குறித்து அவரது உறவினர்கள் முசிறி மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்தனர்.

இதைத்தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டதில், தந்தையான விவசாயியே அவரது மகளை 2020 ஆம் ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய விவரம் தெரியவந்தது. இதனையடுத்து அவரை போலீஸார் கைது செய்தனர். அடுத்த சில மாதங்களில், பெண்ணுக்கு குறை பிரசவத்தில் குழந்தை இறந்து பிறந்தது. மேலும் 5 மாதங்கள் கழித்து உடல் நலம் மிகவும் பாதிக்கப்பட்ட நிலையில் அந்த பெண்ணும் உயிரிழந்தார்.

இதுதொடர்பான வழக்கு திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றத்தில் தொடரப்பட்டு நடந்து வந்தது. வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பளிக்கப்பட்டது. இதில், குற்றம் நிரூபிக்கப்பட்டதையடுத்து விவசாயிக்கு வாழ்நாள் சிறை தண்டனையும், ரூ. 10,000 அபராதமும் விதித்து நீதிபதி ஸ்ரீவத்சன் தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசுத்தரப்பு சிறப்பு வழக்குரைஞராக ஜாகிர் உசேன் ஆஜரானார்.

Next Story

சேரன் மகள் திருமண புகைப்படங்கள்

Published on 24/04/2024 | Edited on 24/04/2024

 

இயக்குநர் மற்றும் நடிகரான சேரனுக்கு நிவேதா பிரியதர்ஷினி, தாமினி என இரண்டு மகள்கள் இருக்கின்றனர். இதில் மூத்த மகள் நிவேதா பிரியதர்ஷினிக்கும் சுரேஷ் ஆதித்யா என்பவருக்கும் கடந்த 22ஆம் தேதி சென்னை கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகன் கோயிலில் எளிமையான முறையில் திருமணம் நடைபெற்றுள்ளது. இத்திருமணத்திற்கு சேரனின் குருவான கே.எஸ்.ரவிக்குமார் தாலி எடுத்துக் கொடுத்துள்ளார். மேலும் சேரனிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றிய பாண்டிராஜ், ஜெகன்னாத் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். அத்தோடு இயக்குநர் பாராதிராஜா, சீமான், சமுத்திரகனி உள்ளிட்ட பல பிரபலங்கள்  திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர்.