தேதி குறித்த விஜய் - த.வெ.க.வின் அடுத்த அதிரடி

viay tvk party flag update

திரைப்படங்களில் நடித்துக் கொண்டே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வருகிறார் விஜய். மேலும் 2026 தமிழக சட்டமன்றத் தேர்தல் தான் தனது இலக்கு எனக் குறிவைத்துச் செயல்பட்டு வருகிறார். அந்த வகையில் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்று வரும் நிலையில் உட்கட்சிக் கட்டமைப்பு விரிவாக்கம் தொடர்பான நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டமும் அவ்வப்போது நடைபெற்று வருகிறது.

இதனிடையே கட்சியின் முதல் மாநாடு அடுத்த மாதம் திருச்சியில் பிரம்மாண்டமாக நடத்தத் திட்டமிட்டுள்ளதாக முதலில் கூறப்பட்டது. பின்பு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் நடைபெற உள்ளதாகத் தகவல் வெளியானது. மேலும் கட்சிக் கொடியினை அம்மாநாட்டில் அறிமுகம் செய்யவுள்ளதாகவும் சொல்லப்பட்டது.

இதனைத் தொடர்ந்து கட்சிக் கொடியில் மஞ்சள் மற்றும் சிவப்பு என இரண்டு வண்ண கொடியின் மத்தியில் வாகை மலர் இடம்பெற உள்ளதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சிக் கொடியை ஆகஸ்ட் 22ஆம் தேதி விஜய் அதிகாரப்பூர்வமாக அறிமுகம் செய்யவுள்ளதாக தற்போது புதுத் தகவல் வெளியாகியுள்ளது. பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் எளிமையான முறையில் இந்த கட்சிக் கொடி அறிமுகம் செய்யவுள்ளதாகவும் கட்சியின் முதல் மாநாட்டைச் செப்டம்பர் மாதம் நடத்தத் திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

actor vijay Tamilaga Vettri Kazhagam
இதையும் படியுங்கள்
Subscribe