viay ordered to his fans regards the goat movie promotions

விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் நடித்து வருகிறார். விஜய்யின் 68ஆவது படமாக உருவாகி வரும் இப்படத்தை ஏ.ஜி.எஸ் நிறுவனம் சார்பில் அர்ச்சனா கல்பாத்தி தயாரிக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இப்படத்தில், பிரஷாந்த், பிரபுதேவா, மீனாட்சி செளத்ரி, சினேகா, லைலா, மோகன், ஜெயராம், வைபவ், பிரேம் ஜி, யோகி பாபு என ஏகப்பட்ட பிரபலங்கள் நடித்து வருகின்றனர்.

Advertisment

இப்படத்தின் மூன்று பாடல்கள் இதுவரை வெளியாகியுள்ள நிலையில் செப்டம்பர் 5ஆம் தேதி விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு இப்படம் வெளியாகவுள்ளது. இப்படத்தை அடுத்து இன்னொரு படத்தில் நடித்து முடித்துவிட்டு முழு நேர அரசியலில் விஜய் ஈடுபடவுள்ளதாக அறிவிப்பு வெளியானதால், விஜய்யின் அடுத்த படம் கடைசி படமாகப் பார்க்கப்படுகிறது. இப்படம் விஜய்யின் 69ஆவது படமாக உருவாகும் நிலையில் அ.வினோத் இப்படத்தை இயக்குவதாகத் தகவல் உலா வருகிறது.

Advertisment

இதனிடையே தமிழக வெற்றிக் கழகம் என்ற அரசியல் கட்சியை நடத்தி வரும் விஜய், தற்போது ‘தி கோட்’ பட வெளியீட்டின் போது, புரொமோஷன் பணிகளுக்காக உருவாக்கப்படும் பேனர்களில் தமிழக வெற்றிக் கழகம் என்ற பெயரை பயன்படுத்தக் கூடாது எனக் கட்சி நிர்வாகிகளுக்கும், ரசிகர்களுக்கும் உத்தரவிட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.