vettaiyan ritika sing character look released

ஜெயிலர்படத்தைதொடர்ந்துலைகாதயாரிப்பில் இரண்டு படங்கள் நடிக்ககமிட்டானரஜினிகாந்த், அதில் முதல்படமாக லால்சலாம் படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து மற்றொரு படமாக த.செ.ஞானவேல்இயக்கத்தில் ஒரு படம் நடிக்ககமிட்டானநிலையில் அப்படம்வேட்டையன்என்ற தலைப்பில் உருவாகியுள்ளது. இப்படத்தை அடுத்து தற்போதுசன்பிக்சர்ஸ்தயாரிப்பில்லோகேஷ்கனகராஜ் இயக்கத்தில் கூலி என்ற தலைப்பில் ஒரு படம் நடித்து வருகிறார்.

Advertisment

இந்த நிலையில் வேட்டையன் படம் அக்டோபர் 10ஆம் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னட மொழிகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பு கேரளாவில் தொடங்கி, திருநெல்வேலி, மும்பை, சென்னை என பல்வேறு பகுதிகளில் நடைபெற்றது. இப்படத்தில் ரஜினியோடு இணைந்து அமிதாப் பச்சனும் நடித்துள்ளார். இவர்களோடு மஞ்சு வாரியர், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, துஷாரா விஜயன், ரித்திகா சிங் எனப் பல்வேறு பிரபலங்கள் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இப்படத்தின் டைட்டில் டீசர் கடந்த ஆண்டு ரஜினி பிறந்தாளன்று டிசம்பர் 12ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதையடுத்து படத்தில் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ பாடல் சமீபத்தில் வெளியாகி பெரும் ஹிட்டடித்தது.

Advertisment

மேலும் இசை வெளியீட்டு விழா வருகிற 20ஆம் தேதி சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறவுள்ளது. இதனிடையே டப்பிங் மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த், ஃபகத் ஃபாசில் என படக்குழுவினர் அடுத்தடுத்து டப்பிங் பணிகளை தொடங்கினர். இந்த நிலையில் இப்படத்தில் நடித்த நடிகர்களின் கதாபாத்திர லுக் போஸ்டர்கள் அடுத்தடுத்து வெளியாகும் என படக்குழு தெரிவித்துள்ளது. அதன்படி முதல் கதாபாத்திர லுக் போஸ்டராக ரித்திகா சிங்கின் கதாபாத்திர போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. ரூபா என்ற போலீஸ் அதிகாரியாக அவர் நடிக்கிறார். மேலும் இது தொடர்பாக படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சிறிய விடியோவும் வெளியாகியுள்ளது. அதில் கம்பீரமான தோற்றத்தில் அவர் நடித்துள்ளது போல் தெரிகிறது.

இறுதிச்சுற்று மூலம் பிரபலமான நடிகை ரித்திகா சிங், கடைசியாகத் தமிழில் விஜய் ஆண்டனியின் கொலை படத்தில் நடித்திருந்தார். இதையடுத்து அதே விஜய் ஆண்டனி நடிப்பில் சமீபத்தில் வெளியான மழை பிடிக்காத மனிதன் படத்தில் கேமியோ ரோலில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisment