vettaiyan movie audio launch update

ரஜினிகாந்த் நடிப்பில் வருகிற அக்டோபர் 10ஆம் தேதி வெளியாகவுள்ள திரைப்படம் வேட்டையன். த.செ. ஞானவேல் இயக்கியுள்ள இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா, மஞ்சு வாரியர், கிஷோர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்து வருகிறார்.இப்படம் கல்வி தொடர்பானபிரச்சனைகளைபின்னணியாககொண்டுஉருவாக்கப்பட்டுள்ளதாககூறப்படுகிறது.

Advertisment

முன்னதாக இப்படத்திலிருந்து ரஜினி பிறந்தநாளன்று (12.12.2023) டைட்டில் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இதையடுத்து படத்தின் டப்பிங் பணிகளை மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரஜினிகாந்த் என அடுத்தடுத்து தொடங்கியிருந்தனர். தொடர்ந்து இப்படத்தின் முதல் பாடலான ‘மனசிலாயோ...’ கடந்த 9ஆம் தேதி வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

Advertisment

இந்ந நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக படக்குழு வெளியிட்டுள்ள போஸ்டரில், சென்னையிலுள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் வருகிற 20ஆம் தேதி படத்தின் ஆடியோ மற்றும் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சிகள் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் படத்திலுள்ள ரஜினிகாந்த், அமிதாப் பச்சன், ஃபகத் பாசில், ராணா ஆகியோர்களின் லுக்குகளும் போஸ்டரில் இடம்பெற்றுள்ளது.