Advertisment

“வேட்டை தொடரும்” - வசூல் விவரத்தை அறிவித்த படக்குழு

vettaiyan box office update

ரஜினிகாந்த் நடிப்பில் த.செ.ஞானவேல் இயக்கத்தில் கடந்த 10ஆம் தேதி வெளியான படம் ‘வேட்டையன்’. இப்படத்தில் அமிதாப் பச்சன், ஃபகத் ஃபாசில், ராணா டகுபதி, மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

Advertisment

கல்வி மற்று போலீஸ் என்கவுன்டர் குறித்துப் பேசியுள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது. இருப்பினும் லைகா நிறுவனம் ரசிகர்களின் வரவேற்பு காரணமாக கூடுதல் திரையரங்குகள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது.

Advertisment

இந்த நிலையில் இப்படத்தின் வசூல் விவரத்தை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி உலகம் முழுவதும் இதுவரை ரூ.240 கோடிக்கும் மேல் வசூலித்துள்ளதாக லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. மேலும் “வேட்டை தொடரும்” என தங்களது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளது. இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியானது குறிப்பிடத்தக்கது.

lyca TJ Gnanavel Vettaiyan Actor Rajinikanth
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe