Advertisment

'ராகவன் இஸ் பேக்' - மிரட்டத் தயாராகும் கமல்ஹாசன்

vettaiyaadu vilaiyaadu 2 movie update out now

கடந்த 2006 ஆம் ஆண்டு கெளதம் மேனன் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி பெரும் ஹிட்டடித்த திரைப்படம் வேட்டையாடு விளையாடு. போலீஸ் கதையில் மிகவும் திரில்லான திரைக்கதையுடன் வெளியான இப்படம் கமலின் மாஸ் படங்களில் ஒன்றாக இன்றளவும் ரசிகர்களால் கொண்டாடப்படுகிறது. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இரண்டாம் பாகம் குறித்த எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் எழுந்தது.

Advertisment

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="365a7699-3483-406a-aaf2-5eef3843d134" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500-X-300-Viruman_29.jpg" />

Advertisment

இதனிடையே சில மாதங்களுக்கு முன்பு வேட்டையாடு விளையாடு படம் தொடங்கப்படும் என டோலிவுட்டில் பரவலாக பேசப்பட்டது. ஆனால் அதன் பிறகு படம் தொடர்பான எந்த அறிவிப்பு வெளியாகவில்லை.

இந்நிலையில் மீண்டும் வேட்டையாடு விளையாடு படம் குறித்த சுவாரஸ்யமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான முழு கதையையும் எழுதியுள்ளார் கெளதம் மேனன் விரைவில் கமலை சந்தித்து படத்தின் கதை குறித்து பேச உள்ளாராம். ஆனால் விக்ரம் படத்தை தொடர்ந்து கமல்ஹாசன் அடுத்தடுத்து பிஸியாக நடித்து வருவதால் வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பக்கத்தில் நடிப்பாரா என்று யோசனையில் கெளதம் மேனன் உள்ளாராம். படத்தின் கதைக்கு கமல் ஓகே சொல்லிவிட்டால் வெந்து தணிந்தது காடு படத்தின் வெளியீட்டுக்கு பிறகு வேட்டையாடு விளையாடு படத்தின் இரண்டாம் பாகத்திற்கான பணியை தொடங்கவும் கெளதம் மேனன் திட்டமிட்டுள்ளாராம்.

ACTOR KAMAL HASSHAN gautham menon Vendhu Thanindhathu Kaadu
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe