‘அசுரன்’ படத்தின் வெற்றி தந்த உற்சாகத்தில் இருக்கும் வெற்றி மாறன், தற்போது நடிகர் சூரியை நாயகனாக வைத்து படம் இயக்கி வருகிறார். எல்ரட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், படத்தின் டைட்டிலை இன்று (22.04.2021) அறிவித்துள்ள படக்குழு, ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரையும் வெளியிட்டுள்ளது. ‘விடுதலை’ எனப் பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகர் சூரி போலீஸ் கதாபாத்திரத்திலும், நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்திலும் நடித்து வருகின்றனர். இப்படமானது எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை மையமாக வைத்து உருவாகி வருவதாகக் கூறப்படுகிறது.
Here it is @VetriMaaran ‘s #Viduthalai first look posters.#Ilaiyaraja@sooriofficial@elredkumar@rsinfotainment@VelrajR@mani_rsinfo@DoneChannel1@CtcMediaboypic.twitter.com/DxfKG1Lv9m
— VijaySethupathi (@VijaySethuOffl) April 22, 2021