தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர் வெற்றிமாறன். படத்தின்மேக்கிங்கிற்காக மட்டுமின்றிகதைமற்றும் திரைக்கதைக்காகவும் ரசிகர்களால் கொண்டாடப்படும் இவர்,விசாரணை, வடசென்னை, அசுரன் உள்ளிட்ட வெற்றிப்படங்களை தந்துள்ளார். மேலும் சூர்யாவை வைத்து வாடிவாசல் என்ற படத்தைஇயக்கவுள்ளார். மேலும் இவர், கிராஸ்ரூட்ஃபிலிம்ஸ்என்ற நிறுவனத்தை தொடங்கிபடத்தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளார். ஏற்கனவேஉதயம் என்.எச்.4, கொடிஉள்ளிட்ட படங்களையும் தயாரித்துள்ளார் வெற்றிமாறன்.
இந்த நிலையில்ஃபைவ்ஸ்டார்கிரியேஷன்ஸ்கதிரேசனோடு இணைந்து ஒரு படத்தைதயாரிக்கிறார் வெற்றிமாறன். இப்படத்திற்கு கதைமற்றும் திரைக்கதையைஅவரேஎழுதியுள்ளார். இப்படத்தில் சசிக்குமார்கதாநாயகனாக நடிக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தயாரிப்பாளர் ஃபைவ்ஸ்டார்கதிரேசன் தனதுட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
இந்த படத்தின்இயக்குனர் யார் என்று அறிவிக்கப்படவில்லை. வெற்றிமாறனின் உதவி இயக்குனர்களில் ஒருவர்இப்படத்தை இயக்குவார்எனஎதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தின் மற்றொரு தயாரிப்பாளரான ஃபைவ் ஸ்டார்கதிரேசன் ஏற்கனவே வெற்றிமாறன் இயக்கிய ஆடுகளம் படத்தைதயாரித்தவர் என்பதுகுறிப்பிடத்தக்கது.