Advertisment

"எது வேண்டுமானாலும் நடக்கும் -பாதுகாப்பற்ற சூழலில் வாழ்கிறோம்"  -வெற்றிமாறன் பிரஸ் மீட்

vetri

Advertisment

மைம் கோபி, சுரேஷ் ரவி, ரவீணா ஆகியோர் நடித்துள்ள படம் காவல்துறை உங்கள் நண்பன். பி.ஆர். டாக்கீஸ் மற்றும் வொய்ட்மூன் டாக்கீஸ்இணைந்து தயாரித்துள்ளஇப்படத்தை, இயக்குனர் வெற்றிமாறன் வெளியிடுகிறார்.

காவல்துறை உங்கள் நண்பன் படத்தின் வெளியீட்டை தொடர்ந்து, நேற்று படக்குழுவின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது.அதில் கலந்து கொண்ட வெற்றிமாறன், காவல்துறை மீதான விமர்சனங்கள் குறித்தும் அதை எப்படி பார்க்கவேண்டும் என்பது குறித்தும் பேசினார்.

இயக்குனர் வெற்றிமாறன் பேசியதாவது:-

"எல்லோருக்கும் வணக்கம். இந்த படத்தில் கடைசியாக இணைந்தது நான்தான். சுஷ்மா என்பவர் என்னை அழைத்து, நாங்கள் ஒரு படம் பண்ணலாம் என்று இருக்கிறோம். நீங்கள் அதை பார்த்து, படத்தை வெளியிட்டால் எங்களுக்கு ஒரு பலமாக இருக்கும் என்றார். நானும் படத்தை பார்த்தேன். படத்தை பார்த்தவுடன், அந்த படத்தோடும், படத்தின் கதாபாத்திரங்களோடும் என்னால் ஒத்துப்போக முடிந்தது. அந்த கதாபாத்திரங்களின் பதற்றம், பிரச்சனைகளின் உள்ளே என்னால் இருக்க முடிந்தது. ஒரு படத்தை பார்க்கும்போது, அந்த பாத்திரங்களின் பிரச்சனைகள் நம் பிரச்சனைகளாக மாற வேண்டும். அது மிகவும் முக்கியம். இப்படத்தில், அவர்களுடைய பிரச்சனைதான் நம் பிரச்சனை. நம்முடைய பிரச்னை தான் அந்த கதாபாத்திரங்களின்பிரச்சனை. மிடில் கிளாஸாக இருப்பவர்களுக்கு, எதுவேண்டுமானாலும் நடக்கலாம் என்ற பாதுகாப்பற்றசூழ்நிலையில் நாம் வாழ்கிறோம் என்பதைஅழுத்தமாக சொன்னது போல் இருந்தது.

Advertisment

இந்த படத்தில், என் பெயர் இருப்பதை மரியாதைக்குரிய விஷயமாககருதுகிறேன். ஒரு படத்தில், ஒரு பெயர் இருப்பதால், மக்கள் படத்தை பார்ப்பார்களா என தெரியாது. படம் நல்ல தரத்தோடு இருந்தால் மக்கள் படத்தை பார்ப்பார்கள், பாராட்டுவார்கள். காவல்துறை உங்கள் நண்பன் மாதிரியான படங்கள்,காவல்துறை மீதான விமர்சனம் என்பதைவிட, அந்த அமைப்பில் இருக்கும் ஒரு சிலரின் தவறுகளை சுட்டிக்காட்டி, அந்த அமைப்புக்கும் மக்களும் இடையேயான வித்தியாசத்தை குறைக்கும் ஒன்றாகத்தான் பார்க்கவேண்டும் என கருதுகிறேன். காவல்துறை மீது தொடர்ந்துவிமர்சனங்கள் சினிமாவில்வருகிறெதென்றால், அது நாம் அன்றாடம் பார்க்கும் விஷயங்களின் வெளிப்பாடாகவே திரையில் வருகிறது. அந்த அடிப்படைலதான், இந்த படத்தில் வருவது எல்லாமுமே, நாம் எதோ ஒரு இடத்தில் பார்த்ததாகவே இருக்கிறது.

இந்த படத்தில் கேள்வி கேட்கும்போது,நமக்கு சரியென்று, நாம் செய்வது அந்த அமைப்புக்கு (காவல்துறை) எவ்வளவு பிரச்சனையாக மாறுகிறது என்பதை, இரண்டு மூன்று கதாபாத்திரங்களை வைத்து நன்றாக காட்டிருக்கிறார்கள். இப்படத்தின் கரு மீது படக்குழு வைத்திருந்த நம்பிக்கை, இதனை மக்களுக்கு அளிக்கக்கூடிய, நல்ல படமாகமாற்றியிருக்கிறது. இது ஒரு மரியாதையான முயற்சி, இதை மக்களிடம் எடுத்து செல்ல ஊடகங்கள் உதவவேண்டும். நன்றி" இவ்வாறு வெற்றிமாறன் உரையாற்றினார்.

vetrimaran
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe