இளையராஜா - வெற்றிமாறன் கூட்டணி?

Vetrimaaran

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனரான வெற்றிமாறன் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் அசுரன். தனுஷ், மஞ்சுவாரியர் நடிப்பில் வெளியான இந்தப் படம் மாபெரும் வெற்றி பெற்றது. தொடர்ந்து நாவல்களை படமாக்கும் வழக்கத்தை கொண்டிருந்த வெற்றிமாறன், தற்போது சிறுகதை ஒன்றை படமாக்கும் முயற்சியில் உள்ளார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய துணைவன் என்ற சிறுகதையை மையமாக வைத்து காமெடி நடிகர் சூரி நடிப்பில் இப்படம் உருவாகவுள்ளது. எல்ரட் குமார் தயாரிக்கவுள்ள இந்தப்படத்தின் கதைக்களம் முதலில் நா.முத்துக்குமாரின் ஒரு கவிதையை மையமாக வைத்து உருவாக இருந்தது. கரோனா நெருக்கடி காரணமாக அந்தப்படத்தைத் துவங்குவதில் எழுந்த சிக்கலையடுத்து, வெற்றிமாறன் இந்தப் புதிய கதைக்களத்தைத் தேர்ந்தெடுத்துள்ளார்.

இந்த நிலையில், இந்தப்படத்தின் இசையமைப்பாளராக இசைஞானி இளையராஜா ஒப்பந்தமாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இப்படத்தின் படப்பிடிப்பானது சத்தியமங்கலம் வனப்பகுதியில் விரைவில் தொடங்க உள்ளது. இளம் இசையமைப்பாளர்களோடு பயணித்து வந்த வெற்றிமாறன், தற்போது தன்னுடைய கூட்டணியை மாற்றியிருப்பது ரசிகர்களிடையே அதிக எதிர்பார்ப்பைக் கிளப்பியுள்ளது.

actor soori ilayaraja
இதையும் படியுங்கள்
Subscribe