வணிக ரீதியிலும், விமர்சன ரீதியிலும் வெற்றி பெற்ற 'அசுரன்' படத்தை இயக்கிய வெற்றி மாறன், வர்த்தக ரீதியில் வெற்றி பெற்ற பல படங்களைத் தயாரித்த எல்ரெட் குமார் ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் சார்பில் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கவிருக்கிறார். இது குறித்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் கூறும்போது...

Advertisment

Vetrimaran

''ஒரு தயாரிப்பாளர் என்பதற்கும் மேலாக சினிமா ரசிகன் என்ற முறையில் வெற்றி மாறன் போன்ற இயக்குநருடன் பணி புரிவது எனக்கு பெரும் மகிழ்ச்சியைத் தருகிறது. காரணம், கலையம்சம் மிக்க படங்களுக்கும், வணிக ரீதியான படங்களுக்கும் உள்ள இடைவெளியை நிரப்பும் பாலமாக இருக்கும் அரிதான இயக்குநர்களில் வெற்றி மாறனும் ஒருவர். அவரது படங்களின் உள்ளடக்கம் தனித்தன்மை மிக்கதாக இருப்பதுடன், வணிக வெற்றிக்குத் தேவையன அம்சங்களைக் கொண்டதாகவும் இருப்பதால்தான், தமிழ் ரசிகர்களை மட்டுமின்றி மொழி எல்லைகளைத்தாண்டி அனைத்து ரசிகர்களையும் கவர்கிறது. இதற்கான சமீபத்திய சான்றாக அமைந்திருக்கும் அசுரன் அனைத்து தரப்பு ரசிகர்களையும் கவர்ந்து, பாக்ஸ் ஆபிஸில் வெற்றிக்கொடி நாட்டியிருக்கிறது. தேசிய விருது பெற்ற இயக்குநர் வெற்றி மாறன் மற்றும் அவரது குழுவுடன் இணைந்து மற்றுமொரு மிகச் சிறந்த படத்தைத் தருவதற்கு மகிழ்வுடன் தயாராகிக்கொண்டிருக்கிறேன். வெகு விரைவில் இந்தப் படத்தில் நடிக்கும் நடிக நடிகையர் மற்றும் தொழில் நுடபக்கலைஞர்கள் ஆகியவற்றுடன் மேலதிக விவரங்களை அறிவிக்கிறோம்'' என்றார்.