வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் அசுரன். இந்த படத்தை கலைப்புலி.எஸ். தாணு தயாரித்தார். இது விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மாபெரும் வரவேற்பைப் பெற்றது.

Advertisment

surya

அசுரன் வெற்றியை தொடர்ந்து வெற்றிமாறன் பல முன்னணி ஹீரோக்களை வைத்து இயக்க பேச்சு வார்த்தை நடைபெற்றதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் நடிகர் சூர்யா தாணுவிற்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இந்நிலையில் சூர்யாவின் 40வது படத்தை முதன் முறையாக சூர்யாவுடன் இணைந்து வெற்றிமாறன் இயக்க இருக்கிறார்.

Advertisment

hero

இது குறித்து தனது ட்விட்டர் பதிவில் பேசியுள்ள கலைப்புலி தாணு, "அசுரனின் அசுர வெற்றியைத் தொடர்ந்து இயக்குநர் வெற்றிமாறன் முதல் முறையாக சூர்யாவுடன் இணையும் 'சூர்யா 40' படத்தைத் தயாரிப்பதில் மட்டற்ற மகிழ்ச்சியும் பெருமையும் கொள்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

dabaang

'அசுரன்' படத்தைத் தொடர்ந்து சூரி நாயகனாக நடிக்கும் படத்தை இயக்க ஒப்பந்தமாகியுள்ளார் வெற்றிமாறன். அந்தப் படத்தை முடித்துக் கொடுத்துவிட்டு, சூர்யா நடிக்கும் படத்தை இயக்குவார் எனத் தெரிகிறது.

Advertisment