
'வடசென்னை', 'அசுரன்' ஆகிய படங்களைத் தொடர்ந்து வெற்றிமாறன், நகைச்சுவை நடிகர்சூரியைவைத்து ஒரு படமும், சூர்யாவை வைத்து 'வாடி வாசல்'படத்தையும்இயக்கப்போவதாக அறிவிப்பு வெளியானது.கரோனா தொற்று பாதிப்பால்,படப்பிடிப்புகள் தள்ளிப்போனநிலையில், வெற்றிமாறன் அடுத்து எந்தப் படத்தைஇயக்குவார்என ரசிகர்களிடையே குழப்பம் எழுந்தது.
இந்தநிலையில், வெளிநாட்டில் தற்போது படப்பிடிப்பு நடத்தமுடியாதுஎன்பதால், வெற்றிமாறன், சூரிநடிக்கும்படத்தின்கதையைமாற்றிவிட்டதாகக் கூறப்பட்டது.இந்நிலையில், சூரியை வைத்து, வெற்றிமாறன் இயக்கும்படம், ஜெயமோகன் எழுதிய'துணைவன்' சிறுகதையை அடிப்படையாகக் கொண்டதுஎனத்தற்போதுதகவல்கள் வெளியாகியுள்ளன. மேலும், இப்படத்தின் படப்பிடிப்பை, டிசம்பர் மாதம் 8 -ஆம் தேதி,சத்தியமங்கலம் வனப்பகுதியில்தொடங்கி, 40 நாட்களில்முடிக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும்,இயக்குனர் பாரதிராஜா முக்கியவேடத்தில்நடிக்கவுள்ளதாவும்அத்தகவல்கள்தெரிவிக்கின்றன.
வெற்றிமாறன் ஏற்கனவே, 'லாக்அப்' நாவலை அடிப்படையாக வைத்து 'விசாரணை' படத்தையும், 'வெக்கை' நாவலை அடிப்படையாக வைத்து 'அசுரன்' படத்தையும்இயக்கியுள்ளார். அதன்படி, இதுவரை நாவல்களைப் படமாக்கியவெற்றிமாறன், முதல் முறையாகச் சிறுகதையைப் படமாக்குகிறார். இதன்பிறகு,சூர்யாவை வைத்து இயக்கவுள்ள 'வாடிவாசல்' படம், அதேபெயரிலானநாவலை அடிப்படையாகக் கொண்டது என்பதுகுறிப்பிடத்தக்கது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)