/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/Kamal_Haasan_Vetrimaaran.jpg)
'அசுரன்' வெற்றிக்குப் பிறகு இயக்குநர் வெற்றிமாறன் தற்போது 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். விஜய் சேதுபதி, சூரி, பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தின் படப்பிடிப்புகள் பெரும்பகுதி முடிந்த நிலையில் கரோனா இரண்டாம் அலை காரணமாக இப்படத்தின் படப்பிடிப்புகள் நிறுத்தப்பட்டன. இப்படத்துக்கு இளையராஜா இசையமைத்து வரும் நிலையில் தற்போது தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால் இதன் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.
'விடுதலை' படத்தைத் தொடர்ந்து சூர்யாவுடன் இணைந்து 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ள வெற்றிமாறன் இப்படத்தைத் தொடர்ந்து உலகநாயகன் கமல்ஹாசன் நடிக்கும் புதிய படத்தை இயக்கவுள்ளதாக தற்போது புதிய தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இப்படத்தைத் தயாரிக்க பல்வேறு தயாரிப்பாளர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ள நிலையில் கமல்ஹாசனின் ராஜ்கமல் நிறுவனமே இந்த படத்தைத் தயாரிக்கவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)