Skip to main content

"நாங்க வந்தா ரத்தமும், சதையுமாத்தான் வருவோம்” - அடுத்த அறிவிப்பை வெளியிட்ட வெற்றிமாறன் 

Published on 07/04/2022 | Edited on 07/04/2022

 

vetrimaaran yuvan shankar raja and ameer joins Nilamellam Ratham web series

 

ஜி 5 ஓடிடி தளம் அமீர் - வெற்றிமாறன் கூட்டணியில் உருவாகியுள்ள 'நிலமெல்லாம் ரத்தம்', வசந்தபாலன் இயக்கத்தில் 'தலைமை செயலகம்', ஏ.எல் விஜய் இயக்கத்தில் 'ஃபைவ் - சிக்ஸ்- செவன்- எய்ட்', பிரகாஷ் நடிப்பில் 'ஆனந்தம்', ராதிகா சரத்குமார் நடிப்பில் 'கார்மேகம்', கிருத்திகா உதயநிதி இயக்கத்தில் 'பேப்பர் ராக்கெட்' உள்ளிட்ட 10 இணைய தொடர்களை (வெப் சீரிஸ்) வெளியிடவுள்ளது. இந்த தொடர்களை அறிமுகப்படுத்தும் விழா சென்னையில் நடைபெற்றது. இவ்விழாவில், அமீர் வெற்றிமாறன், வசந்தபாலன், யுவன் சங்கர் ராஜா உள்ளிட்ட ஏராளமான நட்சத்திர பட்டாளங்கள் கலந்து கொண்டனர். 

 

இவ்விழாவில் 'நிலமெல்லாம் ரத்தம்' தொடரை அறிமுகம் செய்து வைத்த பின் பேசிய வெற்றிமாறன், "ஒரு நாள் அமீர் கூப்டு இந்த மாதிரி ஒரு ஐடியா இருக்கு இது பண்ணலாமான்னு பாருங்கன்னு சொன்னாரு. நானும் இப்படி பண்ணுங்க, அப்படி பண்ணுங்கன்னு சொன்னேன். உடனே நீங்களே எழுதுங்கன்னு சொல்லிட்டாரு.சரி எழுதலாமேன்னு ஆரம்பிச்சதுதான் இந்த நிலமெல்லாம் ரத்தம் இணைய தொடர். வெப் சீரிஸ் வந்தது வந்து எழுத்தாளர்களுக்கு ஒரு பொற்காலம். இதுல அவர்களுக்கு சுதந்திரம் நிறைய இருக்கு. திரைப்படங்களுக்கு அதிகபட்சம் 200 பக்கங்கள்தான் கதை எழுத முடியும். ஆனால் இணையத் தொடர்களுக்கு நிறைய எழுதலாம். தமிழில் திரையரங்கு வெளியீட்டை மனதில் வைத்தே படம் எடுத்து பழகிட்டோம். ஆனால் வெப் சீரிஸ்ல நம்முடைய எல்லைகளைத் தாண்டி படம் பண்ணலாம்னு நம்புறோம்" எனத் தெரிவித்தார். 

 

இதனைத் தொடர்ந்து பேசிய அமீர், "நாங்க இங்க வந்து பார்த்ததுல நிறைய (வெப் சீரிஸ்) இணைய தொடர்கள் அழகாகவும், கலர்ஃபுல்லாகவும், குடும்பம் சார்ந்தும் இருந்துச்சு,ஆனால் நாங்க அப்படி இல்லை.  நாங்க வந்ததா ரத்தமும் சதையுமாகத் தான் வருவோம். அதுனாலதான் அதுக்கு நிலமெல்லாம் ரத்தம்னு பேரு வச்சிருக்கோம். சொல்ல முடியாததை இந்த இணையத் தொடர் மூலம் சொல்லும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. என்றார்.

 

'நிலமெல்லாம் ரத்தம்' (வெப் சீரிஸ்) இணையத் தொடருக்கு வெற்றிமாறன் கதை எழுதியுள்ளார். அமீர் நடிக்கும் இந்த இணையத் தொடரை ரமேஷ் இயக்கவுள்ளார். யுவன் இசையமைக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் முதல் முறையாக யுவன் வெற்றிமாறன் இருவரும் இனைந்து பணியாற்ற உள்ளது குறிப்பிடத்தக்கது.

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

கனவை நோக்கி ஓடும் ‘ஸ்டார்’ கவின்

Published on 27/04/2024 | Edited on 27/04/2024
kavin star movie trailer released

டாடா பட வெற்றியை தொடர்ந்து 'பியார் பிரேமா காதல்' பட இயக்குநர் இளன் இயக்கத்தில் 'ஸ்டார்' படத்தில் நடித்துள்ளார் கவின். மேலும் நடன இயக்குநர் சதீஷ் இயக்குநராக அறிமுகமாகும் படத்திலும் நடிக்கிறார். இரு படத்தின் பணிகளும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

இதில் ஸ்டார் படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. ரைஸ் ஈஸ்ட் எண்டர்டெயின்மெண்ட் மற்றும் ஸ்ரீ வெங்கடேஷ்வரா சினி சித்ரா என இரண்டு நிறுவனங்கள் தயாரிக்கும் இப்படத்தில் லால், அதிதி போஹங்கர், ப்ரீத்தி முகுந்தன், கீதா கைலாசம் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். யுவன் ஷங்கர் ராஜா இசையில் உருவாகியுள்ள இப்படம் அடுத்த மாதமான மே 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் 4 பாடல்கள் முன்னரே அடுத்தடுத்து வெளியான நிலையில் சமீபத்தில் வெளியான ‘மெலோடி’ பாடல் ரசிகர்களை கவர்ந்தது. இதில் கவின் பெண் வேடமிட்டு நடனமாடும் காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலானது. 

இதையடுத்து இயக்குநர் இளனுக்கு தயாரிப்பாளர் பெண்டேலா சாகர், வீட்டு மனை வாங்கி கொடுத்துள்ளார். “ஸ்டார் படத்தை பார்ப்பதற்கு முன்பே ஹைதராபாத்தில் எனக்கு ஒரு வீட்டு மனை வாங்கி தந்துள்ளார்” என இயக்குநர் இளன் அவரது எக்ஸ் பக்கத்தில் நெகிழ்ச்சியுடன் பதிவிட்டிருந்தார். இந்த நிலையில் இப்படத்தின் ட்ரைலர் தற்போது வெளியாகியுள்ளது. சினிமாவில் நடிகனாக ஆக வேண்டும் என்ற கனவோடு ஓடும் இளைஞன், வாழ்க்கையில் என்னென்ன சிக்கல்களை சந்திக்கிறான், அதை எதிர்கொண்டு எப்படி ஹீரோவாக மாறினான் என்பதை காதல், காமெடி, எமோஷன் என கலந்து விரிவாக விவரிக்கும் படமாக இப்படம் உருவாகியுள்ளது போல் தெரிகிறது. கவின் பல்வேறு கெட்டப்புகளில் தோன்றுகிறார். இந்த ட்ரைலர் தற்போது ரசிகர்களின் வரவேற்பை பெற்று வருகிறது. 

Next Story

தீயாய் பரவிய தகவல் - முற்றுப்புள்ளி வைத்த யுவன் ஷங்கர் ராஜா

Published on 18/04/2024 | Edited on 18/04/2024
yuvan about his instagram account de activate issue

தமிழில் சினிமாவில் 150க்கும் மேற்பட்ட படங்களுக்கு இசையமைத்து முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் யுவன் ஷங்கர் ராஜா. இப்போது வெங்கட் பிரபு - விஜய் கூட்டணியில் உருவாகும் ‘தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம்’ படத்தில் பணியாற்றி வருகிறார். மேலும் ராம் - நிவின் பாலி கூட்டணியில் உருவாகியுள்ள ஏழு கடல் ஏழு மலை, வடிவேலு - ஃபகத் ஃபாசில் நடிக்கும் மாரிசன், சூரி - துரை செந்தில்குமார் கூட்டணியில் உருவாகும் கருடன் உள்ளிட்ட சில படங்களைக் கைவசம் வைத்துள்ளார். 

இந்த நிலையில் சமூக வலைத்தளங்களில் ஒன்றான இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தொடர்ந்து தனது படங்களின் அப்டேட் மற்றும் அவரது சொந்தக் கருத்துக்களைப் பகிர்ந்து வருவார். ஆனால் தற்போது அவரின் இன்ஸ்டாகிராம் பக்கம் திடிரென ஆக்டிவாக இல்லை. அவரது பக்கம் டீ ஆக்டிவேட் செய்யப்பட்டதா அல்லது முடக்கப்பட்டதா எனப் பல கேள்விகள் ரசிகர்கள் மத்தியில் எழுந்தது. மேலும் சமீபத்தில் வெளியான விஜய் பட பாடல் கலவையான விமர்சனம் பெற்றதாகச் சில தகவல்களும் சமூக வலைத்தளங்களில் உலா வந்தது. 

இந்த நிலையில் இந்த விவகாரம் குறித்து உலா வந்த தகவலுக்கு தற்போது யுவன் ஷங்கர் ராஜா முற்றுப்புள்ளி வைத்துள்ளார். அவரது எக்ஸ் வலைதளப் பக்கத்தில் அவர் குறிப்பிட்டிருப்பதாவது, “இது ஒரு தொழில்நுட்ப கோளாறு, அதை சரி செய்ய என்னுடைய டீம் முயற்சி செய்து வருகிறது. விரைவில் வருகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.