vetrimaaran viduthalai shoot wrapped

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு கொடைக்கானல், சென்னை உள்ளிட்ட பகுதிகளில்விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

இரண்டு பாகங்களாக உருவாகும்இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படங்களைத்தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிட்டு வெற்றிமாறன், விஜய் சேதுபதி, இளையராஜா உள்ளிட்ட படக்குழுவினர் அனைவருக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.