vetrimaaran viduthalai movie tamilandu theatrical release acquired by udhayanithi stalin

Advertisment

இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு 90 சதவீதம் முடிந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் திரை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில் 'விடுதலை' படத்தின் புதிய அப்டேட் தற்போதுவெளியாகியுள்ளது. அதன் படி இப்படத்தின் தமிழக திரையரங்க வெளியீட்டு உரிமையை ரெட் ஜெயண்ட் மூவிஸ் கைப்பற்றியுள்ளது. இதனை தங்களது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்து புதிய போஸ்டரை பகிர்ந்துள்ளது ரெட் ஜெயண்ட் நிறுவனம். அதோடு விரைவில் இப்படம் திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அறிவித்துள்ளது.