vetrimaaran viduthalai movie latest update

இயக்குநர் வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையை தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் கொடைக்கானல் பகுதியில் நடைபெற்று வந்த 'விடுதலை' படப்பிடிப்பு தற்போது முடிந்துள்ளது. இந்த படப்பிடிப்பில் அதிரடியான ஆக்ஷன் காட்சிகளை படமெடுத்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான புகைப்படம் மற்றும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளத்தில் படக்குழு வெளியிட்டுள்ளார்கள். இப்படத்தை தமிழகத்தில் உதயநிதியின் ரெட் ஜெயண்ட் மூவிஸ் நிறுவனம் வெளியிடுகிறது.

Advertisment