Skip to main content

“வள்ளுவருக்கு காவி உடை, ராஜராஜ சோழனுக்கு இந்து பட்டம்” - வெற்றிமாறன் விமர்சனம்

Published on 03/10/2022 | Edited on 03/10/2022

 

vetrimaaran talk about rajaraja cholan and vallurvar

 

தமிழ் ஸ்டுடியோ அமைப்பு ஒருங்கிணைத்த விசிக தலைவர் திருமாவளவனின் மணிவிழாவில் திரைப்பட இயக்குநர் வெற்றிமாறன், நடிகரும், தமிழ்நாடு அரசு திரைப்பட கல்லூரியின் தலைவருமான ராஜேஷ் உள்ளிட்டோர் கலந்துகொண்டு கலை விழாவில் பங்கேற்ற ஆவண மற்றும் குறும்படங்களின் இயக்குனர்களுக்கு சான்றிதழை வழங்கினார். 

 

அதனை பிறகு இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், “திருமாவளவன் மிகவும் எளிமையான மனிதர். அசுரன் படத்தை எடுப்பதற்கு முன்பு, திருமாவளவனை நேரில் சந்தித்து, இந்த மாதிரி ஒரு படத்தை எடுப்பதில் எதற்கு முக்கியத்துவம் தர வேண்டும் என்று கேட்டேன். அதற்கு, 'தனி மனிதனால் ஒரு சமூகத்திற்கு தீர்வு வருகிறது மாதிரி படத்தை எடுக்காதீர்கள். தொடர்ந்து சினிமாவில் நீங்கள் அதே தவறை தான் செய்கிறீர்கள். அதை மாற்றி ஒரு அமைப்பால் தீர்வு கிடைப்பது போல் பண்ணுங்க' என்றார். ஆனால் அசுரன் படம் வெளியானபோது அதே குற்றச்சாட்டை வைத்தார். சில விஷயங்கள் தவிர்க்க முடியாமல் நடந்து விடுகிறது.

 

கலை என்பது அரசியல். இலக்கியம், சினிமா எல்லாமே அவர்கள் கையில்தான்  இருந்தது. அதனை திராவிட இயக்கம் அவர்களின் கையில் இருந்து எடுத்ததன் விளைவுதான் தமிழ்நாடு ஒரு மதசார்பற்ற மாநிலமாகவும், பல வெளிப்புற சக்திகளை எதிர்க்கும் பக்குவத்துடன் இருக்கிறது என நினைக்கிறேன். சினிமா வெகுமக்களை மிக எளிதில் சென்றடையக்கூடிய ஒரு கலை வடிவம். சினிமாவை அரசியல் வடிவமாக்குவது மிகவும் முக்கியமான ஒன்று. திராவிட இயக்கம் சினிமாவை கையில் எடுத்த பிறகு கலை  கலைக்காகத்தான், இது மக்களுக்கானது அல்ல என்று நிறைய பேசினார்கள். மக்களுக்காகத்தான் கலை, மக்களை சரியாக பிரதிபலிப்பதுதான் கலை. அப்படிப்பட்ட கலையை நாம் இன்றைக்கு சரியாக கையாள வேண்டும். அப்படி கையாள தவறிவிட்டால், எப்படி வள்ளுவருக்கு காவி உடை கொடுக்கிறார்களோ, ராஜராஜ சோழனை  இந்து அரசனாக்குவது என தொடர்ந்து நம்முடைய அடையாளங்கள் பறிக்கப்படுகிறதோ அதே போன்று சினிமாவில் ஒரு நாள் நிச்சயம் நடக்கும். நம்முடைய அடையாளங்களை காப்பாற்றிக் கொள்ள வேண்டும். விடுதலைக்காக போராட வேண்டும். என்னால் முடிந்த வரை பங்களிப்பை கொடுப்பேன்” என தெரிவித்துள்ளார். 

 

 

சார்ந்த செய்திகள்

Next Story

சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் திருமாவளவன் உள்ளிட்ட 14 பேர் போட்டி!

Published on 28/03/2024 | Edited on 28/03/2024
14 contests including Thirumavalavan in Chidambaram Parliamentary Constituency

தமிழகத்தில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி முதல் கட்டமாக பாராளுமன்றத் தேர்தல் நடைபெறுகிறது. இதனையொட்டி வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாளான புதன்கிழமை சிதம்பரம் தொகுதியில் 27 மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.

அதனைத் தொடர்ந்து அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும் அரியலூர் மாவட்ட ஆட்சியருமான ஆணிமேரி ஸ்வர்னா தலைமையில் வேட்பு மனுக்கள் பரிசீலனை வியாழக்கிழமை நடைபெற்றது.

இதில் திமுக கூட்டணி தலைமையில் போட்டியிடும் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், அதிமுக வேட்பாளர் சந்திரகாசன், பாஜக வேட்பாளர் கார்த்தியாயினி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜான்சிராணி, பகுஜன் சமாஜ் கட்சி வேட்பாளர் நீலமேகம், நாடாளும் மக்கள் கட்சியின் வேட்பாளர் மனுக்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டது.

இதில் சுயேச்சையாக போட்டியிட்ட முன்னாள் அதிமுக எம்பி சந்திரகாசி மனு நிராகரிக்கப்பட்டது.  மேலும் மாற்று வேட்பாளர்கள் மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் மனுக்கள் நிராகரிக்கப்பட்ட நிலையில் சிதம்பரம் பாராளுமன்ற தொகுதியில் அங்கீகரிக்கப்பட்ட மற்றும் பதிவு செய்யப்பட்ட பிரதான கட்சி வேட்பாளராக 6 பேரும் 8  சுயேச்சை வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர். இதில் இறுதி வேட்பாளர் பட்டியல் 30-ந்தேதி வெளியிடப்படுகிறது. இன்னும் வேட்பாளர்கள் குறையும் என்று கூறப்படுகிறது.

Next Story

பானை சின்னம் விவகாரம்; வி.சி.க.வுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த தேர்தல் ஆணையம்!

Published on 27/03/2024 | Edited on 27/03/2024
The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

நாட்டின் 18 ஆவது நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டு, மொத்தமாக ஏழு கட்டங்களாகத் தேர்தல் நடத்தப்படவுள்ள நிலையில், முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஏப்ரல் 19 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற இருக்கிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை ஜூன் 4 ஆம் தேதி நடைபெறவுள்ளது. ஏற்கெனவே தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தேர்தல் பணியில் தீவிரம் காட்டி வரும் நிலையில், தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதால் தேர்தல் களம் அனல் பறக்க ஆரம்பித்துவிட்டது.

அதே சமயம் தமிழகத்தில் தி.மு.க. தலைமையிலான இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் வி.சி.க. மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் மற்றும் விழுப்புரம் ஆகிய தொகுதிகளில் போட்டியிட உள்ளது. அதோடு கேரள மற்றும் மகாராஷ்டிராவிலும் வி.சி.க. போட்டியிட உள்ளது. இதனையடுத்து பானை சின்னம் கேட்டு வி.சி.க. சார்பில் டெல்லி உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. வேட்புமனு தாக்கல் இன்று (27.03.2024) முடிவடைய இருப்பதால் தேர்தல் ஆணையம் தங்களுக்கு பானை சின்னம் ஒதுக்க வேண்டும் என உத்தரவிட வேண்டும் என கோரிக்கை வைத்து நீதிமன்றத்தை விசிக நாடியது.

The Pot Symbol Affair The Election Commission gave shocking information to the VC

அப்போது இந்த வழக்கை விசாரித்த டெல்லி உயர் நீதிமன்றம் வி.சி.க.வின் கோரிக்கை குறித்து உரிய நடவடிக்கை எடுக்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு டெல்லி உயர்நீதி மன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் மக்களவைத் தேர்தலில் விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு பானை சின்னம் ஒதுக்க தேர்தல் ஆணையம் மறுத்துள்ளது. இன்று மாலை 05.30 மணியளவில் வி.சி.க. வழக்கறிஞருக்கு தேர்தல் ஆணையம் சார்பில் அனுப்பபட்ட மின்னஞ்சலில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.

கடந்த தமிழக சட்டமன்ற தேர்தலில் வி.சி.க. 6 சட்டமன்ற தொகுதிகளில் பானை சின்னத்தில் போட்டியிட்டு 4 தொகுதிகளில் வி.சி.க. வெற்றி பெற்றதும், கடந்த மக்களவைத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் பானை சின்னத்தில் போட்டியிட்டு வி.சி.க. தலைவர் தொல். திருமாவளவன் வெற்றி பெற்றதும் குறிப்பிடத்தக்கது. தேர்தல் ஆணையத்தின் இந்த உத்தரவு விசிக கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களிடையே அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.