vetrimaaran talk about director pa ranjith

பா. ரஞ்சித், காளிதாஸ் ஜெயராம், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடிப்பில் நட்சத்திரம் நகர்கிறது என்ற படத்தை இயக்கி முடித்துள்ளார். இப்படம் வரும் 31 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இதனையொட்டி நேற்று இப்படத்தின் இசை வெளியிட்டு விழா சென்னையில் நடைபெற்றது.

Advertisment

இவ்விழாவில் பேசிய வெற்றிமாறன், "பா.ரஞ்சித்தின் 'அட்டக்கத்தி' படம் பார்க்கும் போது ஒரு பெரிய மாற்றத்திற்கான தொடக்கமாக தெரிந்தது. அந்த படம் பார்க்கும் போது என்ன மாதிரியான உணர்வு இருந்ததோ, அதே போன்ற உணர்வு 'நட்சத்திரம்' நகர்கிறது படத்தின் ட்ரைலரை பார்க்கும் போது இருந்தது. இது வரைக்கும் உறவுகள் பற்றி நாம் பேச தயங்குகிற விசயத்தை, இந்த படம் வெளியான பிறகு தமிழ் சினிமாவில் நிகழ்த்தும் படமாக இது இருக்கும். ரஞ்சித் மீண்டும் புது ட்ரெண்டை உருவாக்கியிருக்கிறார். நிச்சயம் இந்த படம் வெற்றி பெறும்" எனத் தெரிவித்துள்ளார்.

Advertisment