Advertisment

விஜய் சேதுபதி ஏன் வடசென்னையில் நடிக்கவில்லை..? வெற்றிமாறன் சொன்ன காரணம்

vetrimaaran

Advertisment

தனுஷ் - வெற்றிமாறன் கூட்டணியில் 3 பாகமாக உருவாகும் 'வட சென்னை' படம் வரும் ஆயுதபூஜையை முன்னிட்டு அக்டோபர் மாதம் 17ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சமீபத்தில் நடந்தது. அப்போது இப்படம் குறித்து இயக்குனர் வெற்றிமாறன் பேசும்போது... "படத்திற்கு 'ஏ' சர்ட்டிபிகேட் கிடைத்துள்ளது. எந்த ஒரு காட்சிகளும் நீக்கப்படவில்லை. முதல் பாகத்தின் வெளியீட்டைத் தொடர்ந்து படத்தின் இரண்டாம் மற்றும் அடுத்தடுத்த படங்கள் வெளிவரும். அந்தந்த காலகட்ட காட்சிகளுக்கு ஏற்ப தனுஷ் அவர்கள் அருமையாக நடித்துள்ளார். அவரின் பேச்சு, நடிப்பு, நடை என அசத்தியுள்ளார்.

style="display:block"

data-ad-client="ca-pub-7711075860389618"

data-ad-slot="6542160493"

data-ad-format="link"

data-full-width-responsive="true">

ஜெயில் செட்டப் மற்றும் வடசென்னை செட்டப் ஆகிய இரண்டு செட்டப்பையும் மிகப் பிரமாதமாக செய்துள்ளார் கலை இயக்குனர் ஜாக்கி. அவருக்கு மிகப்பெரிய நன்றி. அமீர் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க வேண்டியது விஜய் சேதுபதி தான். ஆனால் அவரின் தேதி பிரச்சனையால் இப்படத்தில் நடிக்க முடியவில்லை. படத்தில் நடித்த ஆண்ட்ரியா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ், டேனியல் பாலாஜி, பவன், சமுத்திரகனி, கிஷோர் என அனைவரும் அற்புதமாக நடித்துள்ளார்கள். மேலும் அமீர், சமுத்திரகனி ஒரு இயக்குனர்களாக எனக்கு சிறிது உறுதுணையாகவும் இருந்தார்கள். படத்தில் நடித்த அனைவருக்கும் எனது நன்றியை தெரிவித்து கொள்கிறேன்" என்றார்.

Advertisment

{"preview_thumbnail":"/s3/files/styles/video_embed_wysiwyg_preview/public/video_thumbnails/8jaA3-6u6jg.jpg?itok=D4wAyjVb","video_url":" Video (Responsive, autoplaying)."]}

DHANUSH vadachennai
இதையும் படியுங்கள்
Subscribe