Advertisment

“அரசு பள்ளிகளில் இருக்கும் சவால்களை உணர முடிகிறது” - வெற்றிமாறன் 

vetrimaaran speech in sir trailer launch

விமல் நடிப்பில் போஸ் வெங்கட் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘சார்’. எஸ்.எஸ்.எஸ். பிக்சர்ஸ் தயாரித்திருக்கும் இப்படத்தை வெற்றி மாறன் வழங்குகிறார். இப்படத்தில் கதாநாயகியாக சாயா தேவி நடித்திருக்க சிராஜ், சரவணன், ரமா, ஜெயபாலன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சித்து குமார் இசையமைத்துள்ள இப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் வெளியீட்டு நிகழ்ச்சி இன்று(18.09.2024) நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் வெற்றி மாறன், விஜய் சேதுபதி, போஸ் வெங்கட், விமல், நட்டி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Advertisment

இந்நிகழ்ச்சியில் வெற்றிமாறன் பேசுகையில், “இந்த படத்தை நான் வழங்கினால் படத்திற்கு உதவியாக இருக்கும் என்று சொன்னார்கள் நானும் சரி என்றேன். எனக்கு ஏற்புடைய படத்தில் என்னுடைய பெயர் இருப்பதில் மிகவும் சந்தோஷம். இந்த படத்திற்காக நான் எதுவும் பண்ணவில்லை. இப்படி எதுவுமே பண்ணாத எனக்கு முதலில் அங்கீகாரம் கொடுத்தற்கு நன்றி. இந்த படத்தை நான் பார்த்து விட்டேன். சார் என்ற தலைப்பு படத்திற்கு பொருத்தமாக இருக்கிறது. இந்த படம் ஒரு ஆசிரியரின் அர்ப்பணிப்பு. இந்த படத்தில் மூன்று தலைமுறை ஆசிரியர்களாக சந்திரன், சரவணன், விமல் ஆகியோர் நடித்துள்ளனர். இதில் சந்திரன் எழுதிய புத்தகத்தை வைத்துத்தான் விசாரணை படத்தை எடுத்தோம்.

Advertisment

இந்த படத்தில் அவர்கள் மூவரும் வெவ்வேறு விதமான சவால்களை சந்தித்து ஆசிரியர்களாக இருக்கின்றனர். அவர்களின் சவால்களை பார்க்கும் போது, இன்றைய சூழலில் அரசு பள்ளிகளில் இருக்கும் சவால்களை உணர முடிகிறது. இப்படத்தில் பணியாற்றிய ஒலிப்பதிவு குழு மற்றும் கலை இயக்குநர் குழு தங்களின் வேலையை சரியாக செய்தது படத்தில் நன்றாக தெரிந்தது. பின்னணி இசை மனநிலைக்கு ஏற்றவாறு இருந்தது. இந்த படம் இன்றை இருக்கும் சூழ்நிலையில் ஏதோ ஒன்றை விவாதித்து அடுத்த கட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போகும் என்ற நம்பிக்கை எனக்கு இருக்கிறது” என்றார்.

bose venkat vimal
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe