vetrimaaran replied praveen gandhi statement

ரட்சகன், ஜோடி, ஸ்டார் உள்ளிட்ட சில படங்களை இயக்கியவர் பிரவீன் காந்தி. இவர் சமீபத்தில் நடந்த நடிகர் ரஞ்சித் நடித்து இயக்கியுள்ள ‘குழந்தை c/o கவுண்டம்பாளையம்’ பட இசை வெளியீட்டில் கலந்து கொண்டார். அப்போது, “சாதி படங்களுக்கு எதிரா எப்போதுமே நான் என் கருத்தை வெளிப்படுத்தி வருவேன். பா.ரஞ்சித், வெற்றிமாறன் உள்ளிட்ட சில டைரக்டர்கள், வளர்ச்சி கண்ட பிறகு தான் சினிமா தளர்ச்சி ஆகிப்போச்சு. என் பக்கத்துல யார் இருக்கான்னு எப்படி எனக்கு தெரியும், எல்லாரும் சேர்ந்து தான் விசிலடிக்கிறோம். சினிமாவில் சாதியை சொல்லவே கூடாது” என்றார்.

இந்த நிலையில் நெல்லையில் செய்தியாளர்களைச் சந்தித்த வெற்றிமாறனிடம் பிரவீன் காந்தி சொன்ன கருத்து தொடர்பாக கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், “இந்தியாவில் இன்று சாதிய அடக்குமுறை இல்லை என சொல்பவர்கள் அல்லது சமூக ஏற்ற தாழ்வு இல்லை என சொல்பவர்கள், எங்கு வாழ்கிறார்கள் என தெரியவில்லை. தமிழகம் உள்பட இந்தியா முழுவதும் சமூக ஏற்ற தாழ்வுகள் இருந்து கொண்டு தான் வருகிறது. அதற்கு நிறைய சம்பவங்களை உதாரணமாக சொல்லலாம்” என்றார்.