Advertisment

வெற்றிமாறன் வெளியிட்ட விமல் பட ஃபர்ஸ்ட் லுக்

vetrimaaran released vimel movie first look poster

சிவா கிலாரி தயாரிப்பில், விமல் மற்றும் கருணாஸ் முதன்மை பாத்திரங்களில் நடிக்க, அறிமுக இயக்குநர் மைக்கேல் கே.ராஜா இயக்கத்தில், உருவாகியிருக்கும் படம் ‘போகுமிடம்வெகு தூரம் இல்லை’. இவர்களுடன் மேரி ரிக்கெட்ஸ், ஆடுகளம் நரேன், மனோஜ்குமார், பவன், அருள்தாஸ், தீபா சங்கர், சார்லஸ் வினோத், வேல ராமமூர்த்தி ஆகியோர் இணைந்து நடித்துள்ளனர்.

Advertisment

சென்னையிலிருந்து திருநெல்வேலி வரை செல்லும் பயணம் படத்தின் மையம் என்பதால், படம் தமிழ்நாடு முழுக்க பலஇடங்களில் படமாக்கப்பட்டுள்ளது. திருநெல்வேலி மற்றும் சென்னையில் படத்தின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டிருக்கிறது. இந்த நிலையில் இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெற்றிமாறன் வெளியிட்டுள்ளார். அப்போஸ்டர் ரசிகர்களின் கவனத்தைப் பெற்று வருகிறது.

Advertisment

இப்படத்தின் முழு படப்படிப்பும் முடிந்துவிட்டது. இப்போது போஸ்ட் புரடக்சன் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றது. படத்தின் டீசர், டிரைலர் மற்றும் இசை வெளியீடு குறித்த அறிவிப்புகள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

vimal
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe