vetrimaaran release the vemal movie ma.po.si

போஸ் வெங்கட், பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த இவர் 'கன்னி மாடம்' படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். கடந்த 2020-ஆம் ஆண்டு வெளியான இப்படம் விமர்சனரீதியாக நல்ல வரவேற்பை பெற்றது. அதோடு சில சர்வதேச திரைப்பட விழாவிலும் விருதுகளை கைப்பற்றியது.

Advertisment

இதனைத்தொடர்ந்து அடுத்ததாக சிராஜ் தயாரிப்பில் ஒரு படம் இயக்குகிறார். 'மா.பொ.சி' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் விமல் கதாநாயகனாக நடித்துள்ளார். மேலும் கன்னி மாடம் படத்தில் நடித்த ஸ்ரீ ராம் கார்த்திக், சாயா தேவி உள்ளிட்டோர் நடித்துள்ளார்கள். சித்து குமார் இசைப்பணிகளை மேற்கொள்கிறார்.

Advertisment

vetrimaaran release the vemal movie ma.po.si

இந்த நிலையில் இப்படம் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இப்படத்தை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி வெளியிடுகிறது. விரைவில் படத்தின் டீசர், ட்ரைலர், மற்றும் ரிலீஸ் தேதி வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.