"அதிர்ச்சி அளிக்கிறது" - வெற்றிமாறன் படக்குழு விளக்கம்

vetrimaaran raghava lawrence movie update

தமிழ் சினிமாவில் நடன இயக்குநராகப்பிரபலமடைந்தவர் ராகவா லாரன்ஸ். அதன் பின்பு இயக்குநராக அவதாரம் எடுத்து 'முனி', 'காஞ்சனா', 'காஞ்சனா 2' உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்தும் இருந்தார். இப்போது நடிப்பில் அதிக கவனம் செலுத்தி வரும் ராகவா லாரன்ஸ் 'ருத்ரன்', 'அதிகாரம்' மற்றும் 'சந்திரமுகி 2' படங்களில் கதாநாயகனாக நடித்து வருகிறார்.

இதனிடையே கதிரேசன் தயாரிப்பில் துரை செந்தில்குமார் இயக்கத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக அறிவிப்பு வெளியானது. அதிகாரம் என்ற தலைப்பில் உருவாகும் இப்படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியுள்ளார் வெற்றிமாறன். மேலும் இணை தயாரிப்பாளராகவும் இப்படத்தைத்தயாரித்து வருகிறார். இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்தது.

இப்படத்தின் அப்டேட்டுகள் எதுவும் சமீப காலமாக வெளியாகாததால் இப்படம் டிராப் செய்யப்பட்டுள்ளதாக அண்மையில் தகவல் வெளியானது. இந்நிலையில் படக்குழு இது குறித்து தற்போது விளக்கமளித்துள்ளது. அதில், “அதிகாரம் படம் கைவிடப்பட்டதாகப் பரவி வரும் வதந்திகள் அதிர்ச்சி அளிக்கிறது. அதிகாரம் படத்தின் ஸ்கிரிப்ட் பணிகளும் படப்பிடிப்புகுறித்த திட்டங்களும் தற்போது நடைபெற்று வருகிறது" எனத்தெரிவித்துள்ளது.

actor raghava lawrence
இதையும் படியுங்கள்
Subscribe