vetrimaaran meets ilaiyaraaja regards viduthalai success

வெற்றிமாறன் இயக்கத்தில் சூரி, விஜய் சேதுபதி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள 'விடுதலை பாகம் 1' படம் நேற்று (31.03.2023) திரையரங்குகளில் வெளியானது. எல்ரெட் குமார் தயாரித்திருந்த இப்படத்திற்கு இளையராஜா இசையமைத்துள்ளார். ரசிகர்களின் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் பாசிட்டிவ் விமர்சனங்களே பெற்று வருகிறது. படம் பார்த்த அரசியல் தலைவர்கள் திருமாவளவன் எம்.பி, சீமான் உள்ளிட்டோர் தங்களது கருத்தை வெளிப்படுத்தி படக்குழுவினரை பாராட்டியிருந்தனர்.

Advertisment

படம் வெற்றி பெற்றதை தொடர்ந்து தயாரிப்பாளர் எல்ரெட் குமார் மற்றும் இயக்குநர் வெற்றிமாறன் இளையராஜாவை சந்தித்து வாழ்த்து பெற்றுள்ளனர். இது தொடர்பான புகைப்படம் தற்போது சமுக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது. முன்னதாக இயக்குநர் வெற்றிமாறன் இப்படத்தின் உதவி இயக்குநர்கள் 25 பேருக்கு தலா ஒரு கிரவுண்ட் நிலத்தை பரிசாக வழங்கினார். அதை தொடர்ந்து இப்படத்தில் பணியாற்றிய அனைவருக்கும் ஒரு தங்க நாணயம் வழங்கி மகிழ்வித்துள்ளார்.

Advertisment