vetrimaaran jr ntr movie update

இயக்குநர் வெற்றிமாறன் தற்போது விஜய் சேதுபதி, சூரி ஆகியோரை வைத்து 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வரும் இப்படத்தில் கவுதம் மேனன், கிஷோர் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில்நடித்து வருகின்றனர். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார்.

Advertisment

இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு அனைத்தும் முடிந்த நிலையில் அதன் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. விடுதலை படத்தின் முதல் பாகத்தில் முதல் பாடல் 'ஒன்னோட நடந்தா' நாளை (08.02.2023) வெளியாகவுள்ளது. இப்பாடலை தனுஷ் பாடியுள்ளார். 'விடுதலை' படத்தை தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை தொடங்கவுள்ளார் வெற்றிமாறன்.

Advertisment

இதனிடையே வெற்றிமாறன் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்.டி.ஆரை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தகவல் வெளியானது. வெற்றிமாறன்ஜூனியர் என்.டி.ஆரிடம் மூன்று கதைகளைச்சொன்னதாகவும் அதில் ஒரு கதையை ஜூனியர் என்.டி.ஆர் ஓகே செய்து வைத்துள்ளதாகவும் சொல்லப்பட்டது. மேலும், அந்த கதை இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளதாகவும் முதல் பாகத்தில் ஜூனியர் என்.டி.ஆரும் இரண்டாம் பாகத்தில் தனுஷும் நடிக்கவுள்ளதாகவும்பேசப்பட்டது.

இந்த நிலையில், வெற்றிமாறன் - ஜூனியர் என்.டி.ஆர் கூட்டணி அமைக்கவுள்ளது வெறும் வதந்தி தான் என திரைவட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருவரும் அவரவர் படங்களில் பிசியாக இருப்பதால் தற்போது இருவரும் ஒரு படத்தில் இணைய வாய்ப்பு இல்லை எனவும் கூறுகின்றனர். ஜூனியர் என்.டி.ஆர், 'ஆர்.ஆர்.ஆர்' படத்தை தொடர்ந்து தற்போது கொரட்டலா சிவா இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார். அடுத்ததாக கே.ஜி.எஃப் பட புகழ் பிரஷாந்த் நீல் இயக்கத்தில் ஒரு படம் நடிக்கவுள்ளார்.