vetrimaaran as Guest appearance in vijay antony in Raththam teaser

விஜய் ஆண்டனி தற்போது 'தமிழரசன்', 'அக்னிச் சிறகுகள்', 'காக்கி', 'பிச்சைக்காரன் 2', 'மழை பிடிக்காத மனிதன்', 'கொலை' ஆகிய படங்களில் நடிக்கிறார். இதில் சில படங்கள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இதனிடையே, இயக்குநர் சி.எஸ் அமுதன் இயக்கும் 'ரத்தம்' படத்தில் நடித்து வருகிறார் விஜய் ஆண்டனி.

Advertisment

இப்படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா மற்றும் ரம்யா நம்பீசன் உள்ளிட்ட மூன்று பேரும் கதாநாயகியாக நடிக்கின்றனர். இன்பினிடிவ் ஃபிலிம் வெஞ்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு கண்ணன் இசையமைக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடித்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகிறது.

Advertisment

இந்நிலையில் 'ரத்தம்' படத்தின் டீசர் தற்போது வெளியாகியுள்ளது. இந்த டீசரில் இயக்குநர்கள் வெங்கட் பிரபு, வெற்றிமாறன், பா.ரஞ்சித் உள்ளிட்டோர் சிறப்புத் தோற்றத்தில் வருகின்றனர். அதில் வெற்றிமாறன் பேசும், "நம்ம எதிர்பார்க்கிற அந்த அமைதியான வாழ்க்கை எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் கிடைக்கிறது இல்லை. இன்னைக்கு ஒரு நொடியிலே நமது வாழ்க்கை தலைகீழாக மாற்றப்படலாம். நம்ம சாப்பிடுகிற சாப்பாடு முதல் பேசுற மொழி வரை நமது அடையாளங்களே நமக்கு எதிரியாக மாற்றப்படலாம்" என்னும் வசனம் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.