தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத இயக்குநர்களின் பட்டியலில் இடம் பிடித்துள்ள வெற்றிமாறன், தற்போது விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் உருவாகும் 'விடுதலை' படத்தை இயக்கி வருகிறார். சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பில் சண்டை பயிற்சியாளர் சுரேஷ் என்பவர் விபத்தில் இறந்தது படக்குழுவினரை சோகத்தில் ஆழ்த்தியது. இரண்டு பாகங்களாக இப்படம் உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இப்படத்தைத்தொடர்ந்து சூர்யாவின் 'வாடிவாசல்' படத்தை இயக்கவுள்ளார் வெற்றிமாறன்.
இந்நிலையில், நாவல்களைத்தழுவி திரைப்படமாக எடுத்து விமர்சன ரீதியாகவும் வர்த்தக ரீதியாகவும் வெற்றிப் படங்களைக் கொடுத்து வரும் வெற்றிமாறன்,தற்போது மற்றொரு நாவலைத்திரைப்படமாக்கவுள்ளதாகத்தகவல் வெளியாகியுள்ளது. எழுத்தாளர் இமையம் எழுதிசாகித்ய அகாடமி விருது வென்ற 'செல்லாத பணம்' நாவலைத்தழுவி வெற்றிமாறன் படமாக்கத்திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
'செல்லாத பணம்' நாவலில்ஒரு திருமணமான பெண்ணின் வாழ்க்கையில்அவரதுகுடும்பம், சமூகம் போன்றவற்றின் பங்களிப்பு என்னவாக இருக்கிறது என்பதுவிரிவாகப் பேசப்பட்டிருக்கும். இதுவரை நாவல்களைத்தழுவி வெற்றிமாறன் இயக்கிய'விசாரணை', 'அசுரன்' உள்ளிட்ட படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. இப்போது இயக்கி வரும் 'விடுதலை' படம் எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய 'துணைவன்' சிறுகதையைத் தழுவி எடுக்கப்பட்டு வருவதும், அடுத்ததாக சூர்யா நடிக்கும்வாடிவாசலும் கூட நாவலைத் தழுவிய கதை என்பதும்குறிப்பிடத்தக்கது.