viduthalai

‘அசுரன்’ படத்தைத் தொடர்ந்து, வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘விடுதலை’. இப்படத்தில் நாயகனாக நடிக்கும் சூரி, போலீஸ் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். நடிகர் விஜய் சேதுபதி வாத்தியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். எல்ரெட் குமார் தயாரிக்கும் இப்படத்திற்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்ய, இளையராஜா இசையமைக்கிறார். எழுத்தாளர் ஜெயமோகனின் ‘துணைவன்’ சிறுகதையை அடிப்படையாக வைத்து உருவாகிவரும் இப்படத்தின் படப்பிடிப்பானது சத்யமங்கலம் வனப்பகுதி, செங்கல்பட்டு சுற்றுவட்டாரப் பகுதி என பல்வேறு பகுதிகளில் நடைபெற்றுவந்தது.

Advertisment

முழுவீச்சில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு, கரோனா பரவல் காரணமாக பாதியில் தடைபட்டது. தற்போது கரோனா பரவலின் தாக்கம் குறைந்து இயல்புநிலைக்குத் தமிழ்நாடு திரும்பிவருவதையடுத்து ‘விடுதலை’ படத்தின் படப்பிடிப்பை வெற்றிமாறன் மீண்டும் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தற்போது செங்கல்பட்டு அருகே படப்பிடிப்பு நடைபெற்றுவருவதாகவும் இது படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு என்றும் கூறப்படுகிறது.

Advertisment