Advertisment

வெற்றிமாறன் படத்துக்கு எதிரான வழக்கு; நீதிமன்றம் அதிரடி உத்தரவு

328

வெற்றிமாறன் தயாரிப்பில், அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இபப்டத்தில் அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம் மற்றும் சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்குகிறார். இப்படதின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது.

Advertisment

இதனிடையே இப்படம் 54வது ரோட்டர்டாம் சர்வதேசத் திரைப்பட விழாவில் விருது வென்றது. மேலும் பல்வேறு சர்வதேச திரைப்பட விருதுகளில் விருது வென்றுள்ளது. இப்படத்திற்கு தணிக்கை சான்று வழங்கக்கூடாது என கோவையை சேர்ந்த ராஷ்ட்ரிய சனாதன சேவா சங்கம் சார்பில் சென்னை உயர்நீதி மன்றத்தில் மனு கொடுக்கப்பட்டது. இதையடுத்து மேலும் ஒரு வழக்கு சென்னை உயர்நீதி மன்ற மதுரை கிளையில் கொடுக்கப்பட்டது. இப்படி தொடர்ந்து படத்திற்கு எதிர்ப்பு வந்ததால் படத்தின் ரிலீஸ் அறிவிப்பு வெளியாகாமலே இருந்து வந்தது. ஆனால் கடந்த 9ஆம் தேதி ரிலீஸ் வெளியானது. செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. பின்பு அதை நோக்கி பட வேலைகள் நடைபெற்று வந்தது. 

327

படத்தின் இரண்டாவது பாடல் கடந்த 17ஆம் தேதி வெளியாகியிருந்தது. தொடர்ந்து படம் குறித்த அப்டேட்டுகள் வெளியாகி வந்ததால் படத்தை பார்க்க ரசிகர்கள் ஆவலாக இருந்தனர். ஆனால் தற்போது படத்தின் டீசருக்கு எதிராக சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அந்த மனுவில், படத்தின் டீசரில் சிறுவர், சிறுமிகள் குறித்து ஆபாசமான காட்சிகள் அதிக அளவில் உள்ளதாகவும், இது பாலியல் குற்றம் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் டீசரை சமூக ஊடகங்களில் இருந்து நீக்க வலியுறுத்தி படக்குழு மீது மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. 

Advertisment

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், படத்தின் டீசரை யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் இருந்து நீக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளது. மேலும் இனிவரும் காலங்களில் இதுபோன்ற பதிவேற்றங்கள் நடக்காமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. அதோடு படக்குழு மீது நடவடிக்கை எடுப்பது குறித்து மனுதாரர் தனியாக உரிய அமைப்பிடம் மனு அளிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது. 

high court madurai bench Bad Girl Vetrimaaran,
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe