Advertisment

வாடிவாசல் அல்லது வடசென்னை 2; எந்த படம் முதலில்? - வெற்றிமாறன் பதில்

vetrimaaran about vaadivasal update

Advertisment

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிக்க ஒப்பந்தமான படம் 'வாடிவாசல்'. தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார். இப்படம் ஜல்லிக்கட்டை மையப்படுத்தி உருவாகிறது. அதற்காக மாடுபிடி வீரர்களுடன் சூர்யா பயிற்சி மேற்கொள்ளும் வீடியோ முன்னதாக வெளியாகி படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. ஆனால், அதன் பிறகு எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதனிடையே பாலா இயக்கும் 'வணங்கான்' படத்தில் நடித்து வந்தசூர்யா சில காரணங்களால் அப்படத்தில் இருந்து விலகினார்.

alt="ad" data-align="center" data-entity-type="file" data-entity-uuid="c240ff38-9d9c-4a6e-a1e6-6a4dff1a4bd3" src="https://www.nakkheeran.in/sites/default/files/inline-images/500x300%20%281%29.jpg" />

அதன் பிறகும் வாடிவாசல் பட அப்டேட் வெளியாகாததால் இப்படத்திலிருந்தும் சூர்யா விலகிவிட்டதாகவும் தகவல் வளியானது. இதுகுறித்து தயாரிப்பாளர் தாணு, “படம் கைவிடப்படவில்லை. படத்தின் ப்ரீ-புரொடக்‌ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. வரும் மாதங்களில் அப்டேட்டுகள் வெளியாகும்” என கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்திருந்தார். அதன் பிறகும் தற்போது வரை எந்த அப்டேட்டும் வெளியாகவில்லை. இதையடுத்து சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் நடிக்க தொடங்கிவிட்டார் சூர்யா.

Advertisment

வெற்றிமாறன் 'விடுதலை' படத்தின்பணிகளில் பிசியாக இருப்பதால் இதனை முடித்துவிட்டு வாடிவாசல் தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. அண்மையில் 'வட சென்னை 2' எப்போது உருவாகும் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் பரவலாகப் பேசப்பட்டதை அடுத்து வெற்றிமாறன் அடுத்ததாக எந்த படத்தை எடுப்பார் என குழப்பத்தில் இருந்தனர் ரசிகர்கள்.

அந்த குழப்பத்தைதீர்த்து ரசிகர்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் ஒரு அப்டேட் கொடுத்துள்ளார் வெற்றிமாறன். இது தொடர்பாக 'விடுதலை 1' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் பேசிய வெற்றிமாறன், "விடுதலை படத்தின் இரண்டு பாகங்களும் வெளியான பிறகு வாடிவாசல் படம் தொடங்கப்படும். அதை முடித்துவிட்டு வடசென்னை-2 ஆரம்பிக்கப்படும்" என்றார்.

vaadivaasal
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe