Advertisment

வாடிவாசல், விஜய் பட அப்டேட் சொன்ன வெற்றிமாறன்

vetrimaaran about vaadivaasal vijay movie

திரைப்பட பத்திரிகையாளர் சங்கம் மருத்துவக் காப்பீட்டு அட்டை வழங்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. அதில் இயக்குநர் வெற்றிமாறன் கலந்து கொண்டு பேசினார். பின்பு அவரிடம் வாடிவாசல், விஜய்யுடன் இணையும் படம் என அவரது அடுத்த படங்களின் அப்டேட் குறித்து கேள்வி கேட்கப்பட்டது.

Advertisment

வாடிவாசல் பற்றிப்பேசுகையில், "விடுதலை 2 முடிந்ததும் வாடிவாசல் ஆரம்பிக்கவுள்ளது. ப்ரீ ப்ரொடக்‌ஷன் பணிகள் நடந்து வருகிறது. லண்டனில் காளைகள் போல் ஒரு ரோபோவை உருவாக்கி வருகிறோம்.இங்கு வளர்கிற மாடு போல அதை ரெடி பண்ணுகிறோம். மேலும் ஸ்க்ரிப்ட் பணிகளும் நடந்து வருகிறது" என்றார்.

Advertisment

விஜய்யுடன் இணையும் படம் குறித்துப் பேசுகையில், "நாங்கள் இருவருமே ரொம்ப நாளாக படம் பண்ணுவது தொடர்பாக பேசி வருகிறோம். விஜய் சார் ரெடியா தான் இருக்காரு. நான் கமிட் ஆகியுள்ள பணிகளை எல்லாம் முடித்துவிட்டு கண்டிப்பாக விஜய் சாருடன் இணைவேன். அந்த சமயத்தில் நான் சொல்கிற கதைகள் அவருக்கு பிடித்திருந்தால் நிச்சயம் அது ஆரம்பிக்கப்படும்" என்றார்.

vaadivaasal actor suriya actor vijay
Advertisment
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe