Advertisment

சிம்பு பட அப்டேட் எப்போது? - வெற்றிமாறன் அளித்த பதில்

445

இந்திய சினிமாவில் கவனிக்கப்படும் இயக்குநராக இருக்கும் வெற்றிமாறன், சமீபத்தில் சிம்புவை வைத்து ஒரு படம் இயக்கத் தொடங்கினார். தாணு தயாரிப்பில் உருவாகும் இப்படத்தின் ப்ரொமோ ஷூட் சென்னையில் சில தினங்களுக்கு நடந்தது. இதில் இயக்குநர் நெல்சனும் இடம் பெற்றிருந்தார். இப்படத்திற்கு முன்பு சூர்யாவை வைத்து வாடிவாசல் படம் இயக்கவிருந்த நிலையில் அப்படம் தள்ளி போகிறது குறிப்பிடத்தக்கது. 

Advertisment

சிம்புவை வைத்து அவர் இயக்கும் படம் வட சென்னை பட உலகை மையப்படுத்தி உருவாகிறது. அதனால் வட சென்னை படத்தில் வரும் கதாப்பாத்திரங்களும் இதிலும் வருகின்றனர். இப்படம் குறித்து ஏகப்பட்ட தகவல்கள் முன்பு வெளியானது. படத்திற்கு ராஜன் வகையரா என பெயர் வைத்துள்ளதாகவும் பின்பு சிம்பு இரண்டு லுக்கில் வருவதாகவும் அதில் ஒரு கதாபாத்திரத்திற்காக 10 கிலோ எடை குறைத்துள்ளதாகவும் உள்ளிட்ட தகவல்கள் இதில் அடங்கும். கடைசியாக, இப்படம் கைவிடப்படும் நிலமையை நோக்கி செல்வதாக ஒரு அதிர்ச்சி தகவல் வெளியானது. ஆனால் அப்படி ஒன்றும் இல்லை விரைவில் அப்டேட் வரும் என வெற்றிமாறன் ஒரு பேட்டியில் தெரிவித்திருந்தார். 

இந்த நிலையில் தனது அடுத்த படம் குறித்து வெற்றிமாறன் பேசியுள்ளார். அவர் பேசியதாவது, “என்னுடைய அடுத்த பட அப்டேட் இன்னும் 10 - 15 நாட்களில் வரும். இந்த படம் முடிந்த பின்பு வட சென்னை 2 வரும்” என்றுள்ளார். அதனால் இன்னும் 15 நாட்களுக்குள் சிம்பு பட அறிவிப்பு, அவர்கள் நடத்திய ப்ரோமோவுடன் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதோடு பட படப்பிடிபு குறித்த விவரமும் அதில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.  

வெற்றிமாறன் இந்த அப்டேட்டை, அவர் தயாரித்துள்ள பேட் கேர்ள் பட ப்ரிவியூ காட்சியில் தெரிவித்துள்ளார். பேட் கேர்ள் படம் செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தை அவரது உதவி இயக்குநர் வர்ஷா பரத் இயக்கியிருக்க அஞ்சலி சிவராமன், சாந்தி பிரியா, ஹ்ரிது ஹருண், டீ.ஜே.அருணாசலம், சரண்யா ரவிச்சந்திரன் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அமித் திரிவேதி இசையமைத்துள்ள இப்படத்தை பாலிவுட் இயக்குநர் அனுராக் கஷ்யப் வெற்றிமாறனோடு இணைந்து வழங்குகிறார். இப்படதின் டீசர் கடந்த ஜனவரியில் வெளியானது. இதில் குறிப்பிட்ட சமூக பெண்களின் வாழ்க்கையைத் தவறாக சித்தரித்துள்ளதாக சில விமர்சனங்கள் எழுந்தது. பின்பு ரிலீஸ் குறித்த எந்த அறிவிப்பும் இல்லாமல் இருந்தது. இப்போது இன்னும் சில நாட்களில் வெளியாகவுள்ளதால் படக்குழுவினர் புரொமோஷன் பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். 

actor simbu Vetrimaaran,
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe